Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதழோவியம்!

ஷாலினி நியூட்டன்

நெயில் ஆர்ட், லிப் ஆர்ட், உடல் ஓவியம்... என ஃபேஷனில் புதுப்புது கற்பனைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இதில் இன்னும் வித்தியாசமாகத் தன்னுடைய கற்பனையைப் பயன்படுத்தி, முகநூலில் ஒரு லட்சம் லைக்குகளுக்கும் மேல் அள்ளி இருக்கிறார்... லாரா ஜென்கின்சன். 'இதழில் கதை எழுதும் நேரமிது’ என நம்மூர் கவிஞர் முத்துலிங்கம் எழுதினார். லண்டனைச் சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான லாராவோ, இதழில் ஓவியமே வரைந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார். 

ஒவ்வொரு நாளும் இதழில், வித்தியாசமான கார்ட்டூன், வால்ட் டிஸ்னி கதாபாத்திரங்கள், பயமுறுத்தும் 3டி ஸ்டைல் கற்பனைகள் என அசத்துகிறார். டிசம்பர் ஒன்றாம் தேதி, சாண்டா க்ளாஸ் ஓட்டிச்செல்லும் வண்டி யில் பூட்டப்படும் மானை, இதழில் வரைந்து பகிர்ந்தார். பட்டையைக் கிளப்பியது லைக்ஸ். இப்படி லாராவின் கற்பனையில் ஒவ்வொரு நாளும் ’கலர்ஃபுல்’லாக கலக்கிக் கொண்டிருக்கிறது அவருடைய ஃபேஸ்புக்.

இவர் வரையும் அனைத்து ஓவியங்களும் தன்னுடைய சொந்த இதழ்களில், கண்ணாடியை பார்த்தே வரைகிறார் என்பதுதான் ஆச்சர்யம்!

''நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் இது மிகவும் எளிமையானது. ஒரு போட்டோவை கையில் எடுத்துக்கொண்டு கண்ணாடி முன் நின்று பார்ப்பேன். பிறகு, வரையத் துவங்கிவிடுவேன். எந்த பெயின்ட்டும், கலரும் இல்லாமல், மேக்கப்பில் பயன்படும் கலர்கள் மட்டுமே இதில் பயன்படுத்துகிறேன்'' என்று சொல்லும் லாரா, சில நேரங்களில் லிப்ஸ்டிக்குகளையே வேறுவேறு கலர்களில் பயன்படுத்துகிறாராம்.

தனக்கென தனி ஒரு ப்ளாக் அமைத்து, அதில் ஒவ்வொரு நாளும் பல மேக்கப் டெக்னிக்குகளைப் பகிர்ந்து வருகிறார். எப்படி ஒவ்வொரு லிப் கலரையும் பயன்படுத்தலாம்... சதாரண லிப் க்ளாஸ், லிப்ஸ்டிக், ஐ லைனர், மஸ்காரா, இன்னும் மேக்கப் குறித்து என்ன கற்பனைகளை எப்படி புகுத்தினால் மெருகேற்றலாம் என ஐடியாக்களுடன் போட்டோக்களும் பகிரும் லாராவின் அடுத்த திறமை, புகைப்படக் கலை. ஒவ்வொரு கற்பனையையும் அவரே அற்புதமாக புகைப்படம் எடுத்து பகிர்வதுதான் இதில் இன்னொரு ஸ்பெஷல்.

உங்களுக்கும் மேக்கப் டிப்ஸ்கள் வேண்டுமானால் இதோ லாராவின் ப்ளாக்ஸ்பாட் லின்க்: http://www.laurajenkinsonmua.blogspot.co.uk/

முகநூல் பக்கம்: https://www.facebook.com/pages/Laura-Jenkinson-Makeup-Artist/201886346663622

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
இதுக்கு மேல இந்தக் கிழவனால என்ன செய்ய முடியும்?
குட்டீஸ் சாம்ராஜ்யத்தின் ‘குரல்’ தளபதிகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close