Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷூட்டிங்கில் கில்லி... படிப்பிலும் கெட்டி!

பதக்கம் குவிக்கும் நிவேதா

புள் ட்ராப் மற்றும் ட்ராப் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தேசிய அளவில் பதக்கங்கள் குவித்து வரும் தமிழ்ப்பெண், நிவேதா. பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவி. இந்திய அணியின் துப்பாக்கி சுடும் வீராங்கனை. இந்திய அளவில் 4-ம் இடத்தில் இருக்கும் நிவேதா, இந்த ஆண்டு தென்கொரியாவில் நடக்கவிருக்கும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார்.

‘‘துப்பாக்கி சுடுதலில் எங்க அப்பா நேந்திரசிகாமணி, அம்மா நிர்மலா, தங்கை கீர்த்தனா எல்லோருமே மாநில அளவில் குவிச்ச பதக்கங்கள் வீட்டில் இருக்கு. இந்த வருஷம் இந்திய அளவில், பல்கலைக்கழகங்களுக்கு இடையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கேற்று டபுள் ட்ராப் பிரிவில் நான் தங்கம் வென்றதில், என்னைவிட என் குடும்பம் ஹேப்பி!’’ - கண்கள் சுருக்கிச் சிரிக்கிறார்.

‘‘ஆரம்ப காலத்தில் ஏர் ரைஃபிள், ஏர் பிஸ்டல் பிரிவுகளில் மாநிலப் போட்டிகளில் பதக்கங்கள் குவிச்சேன். பின்னர் ஷாட் கன் ஷூட்டிங்கில் ட்ராப் மற்றும் டபுள் ட்ராப் (பறக்கும் தட்டைக் குறிபார்த்து சுடுதல்) பிரிவில் மாநில அளவிலான போட்டிகளில் 35-க்கும் அதிகமான பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 15-க்கும் அதிகமான பதக்கங்களையும் வென்றது இந்தத் துறையில் பலரையும் என்னைக் கவனிக்க வெச்சது. ட்ராப் பிரிவுக்கான பயிற்சி மையம் தமிழகத்தில் சென்னையில் மட்டும் இருந்தாலும், நான் மாசத்துல ரெண்டு தடவையாவது ஹைதராபாத் பயிற்சி மையத்துக்குப் போயிடுவேன். இப்படி ஸ்கூல் காலேஜ்ல, வருஷத்துக்கு 100 நாள் வரைக்கும்கூட லீவ் போட்டாலும் படிப்புலயும் கெட்டி. இந்த செமஸ்டர்லகூட 85 பர்சன்ட்!’’ என்று உற்சாகமாகப் பேசும் நிவேதா,

‘‘பயிற்சிக்கான உதவிகள் செய்து கொடுக்கிற கோவை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சாருக்கு நன்றி. வடமாநிலத்தவர்களே கோலோச்சும் இந்த விளையாட்டில் தமிழகத்தின் முகவரியா இருக்கும் என்னை இந்திய ஒலிம்பிக் தேர்வுக்குழு உறுப்பினரான பத்மநாபன் சார் பிரத்யேகமா பாராட்டினது, மறக்க முடியாத தருணம். 2020 ஒலிம்பிக்தான் கனவு!’’

-  விரல்களை ரைஃபிளாக்கி விளையாட்டாகச் சுட்டுக்காட்டுகிறார், நிவேதா.

பா.குமரேசன்   படங்கள்: அ.நவின்ராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பெண்களின் பாதுகாப்பு... இனி விரல்நுனியில்!
கதை எழுதலாம் வாங்க - 'ட்வின்ஸ்'!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close