Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹலோ விகடன்....

விஜய் டி.வி ‘ஈரோடு’  மகேஷ், கலகல நிகழ்ச்சித் தொகுப்பாளர். கவனிக்க வைக்கும் பேச்சாளர்!

‘‘ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பேச்சுப் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சுட்டேன். கல்லூரிக் காலங்களில், வகுப்பறைகளைவிட மேடைகளில்தான் அதிகம் இருப்பேன். அந்த வயசுல வறுமைக்கு வாக்கப்பட்டு இருந்ததால, புத்தகம், பொருட்களைப் பரிசா தர்ற போட்டிகளைவிட, பணத்தைப் பரிசா தரும் போட்டிகள்லதான் அதிகம் கலந்துப்பேன். அந்தச் சமயத்துலதான் விசுவின் ‘அரட்டை அரங்க’த்துல மைக் கிடைக்க, அந்த மேடை எனக்குப் பெரிய கைதட்டல் வாங்கிக் கொடுத்தது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கும் அடித்தளமா அமைஞ்சது.

தொடர்ந்து, பேச்சாலயே என் கேரியரை அமைச்சுக்கிட்டப்போ, ஒரு விஷயத்தில் தெளிவா இருந்தேன். யாரைப் போலவும் இமிட்டேட் செய்யாம, ஒரிஜினல் மகேஷாவே இருந்து மக்களைச் சென்றடையணும். ஆனா, பெரிய பேச்சாளர்களோட பேச்சை எல்லாம் கவனமா கேட்கணும்; ஒரு விஷயத்தை வெளிப்படுத்துறதுல அவங்க பார்வைக்கும் நம்ம பார்வைக்கும் உள்ள வித்தியாசம் என்னனு புரிஞ்சுக்கணும். ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருக்கும் திறமையை தனிப்பட்ட முறையில வெளிப்படுத்தணும்.

அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில சிறப்பு அழைப்பாளரா பேசக் கூப்பிட்டிருந்தாங்க. ‘எங்கயாச்சும் `வி.ஜே’ ஆக டிரெயினிங் கொடுக்கறதா சொன்னா, தயவு செஞ்சு போகாதீங்க’னு சொன்னேன். பயிற்சி என்பதைவிட, இது உள்ளிருந்து வரணும். சூப்பர் ஸ்டார் ரஜினியோட ஸ்டைலைப் பண்ணினா, ரஜினிதான் அந்த இடத்துல தெரிவாரே தவிர, உங்களோட ஒரிஜினாலிட்டி காணாமல் போயிடும். அதனால, `வி.ஜே’-வுக்கான முதல் தகுதி... நீங்க நீங்களா இருக்குறதுதான்! 

மீடியா ஆசையில் இருக்கறவங்க வெற்றிக் கோட்டைத் தொடத் தேவை யான தகுதிகள் குறித்து இன்னும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்கறேன். கேளுங்க... மேல ஏறி வாங்க!’’ எனும் ‘ஈரோடு’ மகேஷ், ‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில் ஜூன் 23 முதல் 29 வரை பேசுகிறார். 044 - 66802912* எண்ணில் அழையுங்கள்... தெளிவு பெறுங்கள்!

வே.கிருஷ்ணவேணி  படம்: எம்.உசேன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
'ஜி.கே'... கண்மணி!
நல் உணவு சிறுதானிய விருந்து
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close