Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெட்டிவேர் பொருட்கள்... லாபகர பிசினஸ்!

‘‘வீட்டில் வெட்டிவேர் செடி வளர்த்து, அதிலிருந்து பல்வேறு பொருட்கள் தயாரித்து, லாபகரமான பிசினஸாக உருவாக்கலாம்!’’ என்கிறார் கோவை, நேரு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் பயோ டெக்னாலஜி பிரிவின் இணை இயக்குநர் ஜெயஶ்ரீ.

‘‘என் பிஹெச்.டி ஆராய்ச்சிக்கு நான் வெட்டிவேரை எடுத்துக்கொண்டேன். தமிழகத்தில் வளரும் புல்வகை செடியான இதன் பயன் குறித்து ஆராய்ந்தேன். வெட்டிவேர் செடி, மருதமலை அடிவாரத்தில் நிறைய இருக்கிறது. இந்தச் செடி, மண்ணின் தன்மையையே முன்னேற்ற வல்லது. வெட்டிவேர் வட இந்தியாவில் ஒரு வகையாகவும், தென்னிந்தியாவில் ஒரு வகையாகவும் வளர்கிறது. தென்னிந்தியாவில் வளரும் செடியை விதையில்லாமல் எப்படி வளர்ப்பது, அதன் இலை மற்றும் வேரில் என்னென்ன பொருட்கள் தயாரிக்கலாம் என்று நீண்டது ஆராய்ச்சி. மருத்துவக் குணம் நிறைந்த வெட்டிவேர், மூலிகையும்கூட! அதில் அலங்காரப் பொருட்கள், மக்களுக்குப் பயன்படும் பொருட்களைத் தயாரிக்கலாம். குறிப்பாக விசிறி, பாத் பிரஷ், யோகா மேட், குஷன், மாலை மற்றும் அலங்காரப்பொருட்களை தயாரிக்கலாம். வழக்கமாக காளான் படுக்கைக்கு வைக்கோல்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நாங்கள் வெட்டிவேரின் புல்லை வைக்கோலுக்குப் பதிலாக பயன்படுத்துகிறோம்.

தற்போது நானும் என் தோழி ரத்தினமாலாவும் இணைந்து ‘வெட்டிவேர் புராடெக்ட்ஸ்’ என்ற பெயரில் இவற்றை எல்லாம் விற்பனை செய்து வருகிறோம். இதை நீங்களும் செய்யலாம். வீட்டு மொட்டை மாடியில் இந்தச் செடியை வளர்த்தாலே போதுமானது!’’ எனும் ஜெய, வெட்டிவேர் வளர்ப்பு, அதன் மூலம் என்னென்ன பொருட்கள் தயாரிக்கலாம், எப்படி விற்பனை செய்யலாம் என்பது பற்றியெல்லாம் ‘வழிகாட்டும் ஒலி’யில் ஜூன் 16 முதல் 22 வரை பேசுகிறார். 044 - 66802912* எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்... பயன்பெறுங்கள்.

ந.ஆஷிகா  படங்கள்: மு.குகன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி!
காப்பீடு வேறு... முதலீடு வேறு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close