Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசத்தல் அல்வா... சூப்பர் சாலட்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

ஃப்ளவர் - ஃப்ரூட் சாலட்

தேவையானவை: ஆவாரம் பூ - அரை கப், வாகைப்பூ - கால் கப், சுத்தம் செய்து நறுக்கிய முழுநெல்லி - கால் கப், மாதுளை முத்துக்கள் - அரை கப், கழுவி நறுக்கிய ஆப்பிள் - அரை கப், கழுவி நறுக்கிய கொய்யா - கால் கப், கறுப்பு திராட்சை - கால் கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அனைத்து பழங் களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் ஆவாரம்பூ, வாகைப்பூ இரண்டையும் சேர்த்து, தேன் ஊற்றி நன்றாக கலந்து சாப்பிடவும். இது சத்து நிறைந்த சூப்பர் சாலட்!

- எஸ்.நிர்மலா, சென்னை - 11


பேரீச்சை - பனீர் அல்வா

தேவையானவை: பனீர் (துருவியது) - ஒன்றரை கப், கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், பால் - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பொடித்த பாதாம் - முந்திரி - அரை கப் (நெய்யில் வறுக்கவும்).

செய்முறை: பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர், பேரீச்சை விழுது இரண்டையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு, சிறிது பால் தெளித்துக் கிளறி, கேசரி பவுடர் சேர்க்கவும். நெய்யில் வறுத்த பாதாம் - முந்திரி துகள்களை இதனுடன் சேர்க்கவும். பின்னர் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகச் சேர்த்துக் கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, தட்டில் கொட்டி பரிமாறவும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

 படங்கள்: எம்.உசேன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அவள் விகடன் - ஜாலி டே!
மகளிர் தின போட்டி முடிவுகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close