Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போட்டுப்பாரு துப்பட்டா!

தினமும் ஒரே ஸ்டைலில் காலேஜுக்கு துப்பட்டா போட்டுப் போனா, சாமிக்குத்தம் ஆயிடும்னு கண்ணடிக்கிற நம்ம கிரியேட்டிவ் கேம்பஸ் பியூட்டீஸ், விதவிதமா துப்பட்டா ஸ்டைல்ஸ் கண்டுபிடிச்சு கலக்கிட்டு இருக்காங்க. காப்பிரைட்ஸ் வாங்குறதுக்குள்ள நாமளும் ‘Control C (அட, காப்பிம்மா!)’ பண்ணிடலாமா டாப் ஃபோர் துப்பட்டா ஸ்டைல்ஸ்?!

ப்ளீட் ஸ்டைல்

புடவை கட்டும்போது வைக்கிற பிளீட்ஸ் மாதிரி, ஜஸ்ட் ஒரு விரல் அகலத்துல துப்பட்டாவில் ப்ளீட் வைங்க. அதை தோள்பட்டையில் பின் பண்ணிட்டு, ப்ளீட்ஸ் கலைஞ்சுடாம அப்படியே இன்னொரு தோள்பக்கமும் கொண்டுபோய் பின் பண்ணிடுங்க. இப்ப லைட்டா விரிச்சு விட்டா, அலை அலையா... அழகாயிருக்கும்!

(‘அத நாங்க சொல்லணும்’னு சொல்றீங்களா..? ரைட்டு!)

பட்டர்ஃப்ளை ஸ்டைல்

துப்பட்டாவை ரெண்டு பாகமா பிரிச்சு, நடுவுல ஒரு ஹேர்பேண்ட் போடுங்க. அப்படியே அதை சிங்கிள் ப்ளீட்டா ரெண்டு தோள்பட்டையிலும் பின் பண்ணிடுங்க. ஸோ சிம்பிள். இப்ப நீங்க க்யூட்டா ரெண்டு கைகளையும் விரிக்குறப்ப... ‘ஓஹ்ஹோ ஹோ... பட்டர்ஃப்ளை... பட்டர்ஃப்ளை’னு பேக்கிரவுண்டில் ஹம்மிங் கேட்டாலும் சொல்றதுக்கு இல்ல.

(‘அது சரி, நாங்க எதுக்கு கைகளை விரிக்கணும்?’னு கேட்டா... ‘ஙஙங..!’தான் பதில்!)

குயின் ஸ்டைல்

இது பார்ட்டி ஸ்பெஷல் ஸ்டைல். ஸ்டோன் ஹேர்பேண்டை துப்பட்டாவுக்கு நடுவுல பொருத்தணும். அதை அப்படியே நெத்திக்கு நேரா வச்சு, ஹேர்பேண்ட் முன்பக்கம் தெரியுற மாதிரி தலையில் கட்டிடணும். மீதம் இருக்குற துப்பட்டாவின் ரெண்டு முனைகளையும் அப்படியே ஒரே பக்கமா கொண்டு வந்து, ஒரு தோள்பட்டை மேல போட்டு முன்பக்கமா இழுத்துவிடணும். பார்ட்டி குயின் நீங்கதான்!

(எனி பார்ட்டி டுநைட்?!)

நெக் ஃப்ளவர் ஸ்டைல்

மாலை போல துப்பட்டாவை கழுத்துல போடுங்க. கழுத்துக்கு ஒருபக்கமா கைகளை கொண்டு போய் துப்பட்டாவை ஷூ லேஸ் போல மடிச்சு முடிச்சுப் போடுங்க. பிறகு, அதை இன்னொரு தரம் மடிச்சு முடிச்சுப் போட்டு, மொட்டு போல மடிச்சு விடுங்க. ஒரு ஃபேப்ரிக் ஃப்ளவர் மாதிரி அழகா இருக்கும் உங்க கழுத்துல!

(‘பூ வாசம் புறப்படும் பெண்ணே’னு ஃபாலோஅப் வந்தாலும் வரலாம்!)

 அ.பார்வதி  நா.ராஜ முருகன்
மாடல்: ஸ்னேகா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அவள் 16
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close