Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறுஜென்மம் வழங்கும் சேவகி!

ல்வேறு துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களுக்குத் தமிழக அரசால் வழங்கப்படும் அவ்வையார் விருது, இந்த ஆண்டு சாந்தி ரங்கநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுப்பழக் கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வரும் அவரின் 35 ஆண்டு சேவைக்கான கௌரவம் இது!

‘‘சென்னையின் நடுத்தரக் குடும்பத்துப் பெண். இசையில் பி.ஏ முடிச்சதோட திருமணம். பிறகு எம்.ஏ., சோஷியல் வொர்க் முடிச்சதும், சமூக சேவையில் இறங்கினேன். இதையடுத்து, நான் தொடங்கிய ‘மெட்ராஸ் வாலன்டரி பிளட் பேங்க்’, இன்னிக்கு வரைக்கும் சிறப்பா செயல்படுது.

கணவர் ரங்கநாதன், குடிப் பழக்கத்து அடிமையாகி இருந்தார். சிகிச்சைக்கு அமெரிக்கா அழைச்சுட்டுப் போனோம். அப்போ தான், குடி நோயாளிகளைத் திருத்தும் அக்கறை மட்டுமில்ல, விழிப்பு உணர்வும் குடும்பத்துக்குத் தேவைனு தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு மாத சிகிச்சை முடிச்சு, திரும்பிவந்த ஒண்ணரை வருஷம் கழிச்சு கணவர் இறந்துட்டார். அப்ப அவருக்கு வயசு 32. எனக்கு 30. என் நிலை மத்த பெண்களுக்கும் வரக்கூடாது என்ற அக்கறையும், வைராக்கியமும் என்னை எழுப்புச்சு.

மது அடிமைகள் மீட்பு சிகிச்சை பற்றிய கோர்ஸை அமெரிக்காவுல படிச்சு, சென்னையில் என் வீட்டிலேயே அவுட் பேஷன்ட் கிளினிக்கை தொடங்கினேன். கணவர் குடும்பத்தார், டி.டி.கே. மருத்துவமனையை அமைச்சுக் கொடுத்தாங்க. அது நோயாளிகளுக்கு ரொம்பவே உதவியா இருந்தது. போதைப் பழக்கத்துக்கு அடிமையா இருக்கிற இளைஞர்களோட சிகிச்சைக்காக, ‘ஆஃப்டர் கேர் சென்டர்’ ஒன்றையும் தொடங்கினோம்.

முதலில் விழிப்பு உணர்வு, பின்னர் கவுன்சலிங், தொடர்ந்து குழுமுறை சிகிச்சைனு பல்வேறு நிலை சிகிச்சைகள் வழங்கப்படும். குடி நோயாளிகளின் மனைவி, அம்மாவுக்கும் ‘ஃபேமிலி தெரபி’ கொடுத்து தைரியமாக்குவோம். கிராமப்புறங்களில் நேரடி சிகிச்சை கொடுத்துட்டும் இருக்கோம். ஆறு இடங்களில் எங்க மறுவாழ்வு மையம் மூலமா, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, குடி அடிமைகளை மீட்டுட்டு இருக்கோம்.

நம்புங்க... குடிநோயாளிகள் நிச்சயமா குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையா வெளியேற முடியும். அப்படி எங்ககிட்ட சிகிச்சை பெற்று, ஒரு வருடம் முழுமையாக குடிக்காமல் குடிப்பழக்கத்தை மறந்தவர்களுக்கு இரண்டாவது பிறந்தநாள்னு அறிவித்து, விருது கொடுத்து அனுப்பிவைப்போம்!’’ - சேவைக்காகவே வாழும் சாந்தி ரங்கநாதன், ‘ஆல்கஹாலிஸ'த்தில் பிஹெச்.டி முடித்தவர். பத்மஸ்ரீ விருது, ஐ.நா. சபையின் ‘வியன்னா’ சிவில் சமூக விருது என்று பல கௌரவங்கள் பெற்றவர்.

மறுஜென்மம் வழங்கும் சேவகியாக மிளிர்கிறார், சாந்தி ரங்கநாதன்! 

கு.ஆனந்தராஜ் க.சதீஷ்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எழுதப் பிறந்தவள்!
இளகிய மனசுக்காரி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close