Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சோஷியல் கலாட்டா!

சமூக வலைதளம்18 சாதனைப் பெண்கள்

ல்பனா அக்கா... சமூக வலைதளத்தின் வீச்சை ஒரு தனியொரு பெண்ணால் எந்தளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணம். ‘அழகு மலராட, அபிநயங்கள் கூட...’ பாடலை தனக்கே உரிய பாணியில் பாடி அந்த வீடியோவை அவர் யூடியூபில் பதிவிட, அடுத்த சில தினங்களில் அது லட்சம், மில்லியன் என உலகம் முழுக்கப் பரவி வைரலானது. தொடர்ந்து அவர் பதிவிடும் பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைதளங்களில் ‘கல்பனா அக்கா ஃபேன்ஸ் கிளப்’ முளைத்துள்ளன!

பல நாட்களாக வீசிய ஃபேஸ்புக் சாட் வலையில் சட்டென ஒருநாள் வந்து இன்ப அதிர்ச்சி தந்து பேசினார் கல்பனா அக்கா. ‘‘இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் பிறந்தேன். மூணு வருஷம் தமிழ்நாட்டில் தங்கிப் படிச்சிருக்கேன். இப்போ ஆஸ்திரேலியாவில் சூப்பர்வைஸரா வேலை பார்க்கிறேன். சின்ன வயசுல இருந்தே பாட்டுப் பாடப் பிடிக்கும். ஆனா, என் குரல் தேனாவெல்லாம் இருக்காது. அதனால என்னனு, எனக்குப் பிடிச்ச பாடல்களை நான் பாடிட்டேதான் இருப்பேன். அப்படித்தான் ‘அழகு மலர் ஆட’ பாட்டை விளையாட்டா பாடி, விளையாட்டா யூடியூபில் அப்லோடு பண்ணினேன். பார்த்தா அது மில்லியன்னு ஹிட் அடிச்சிருச்சு. தொடர்ந்து, பாடல்களை அப்லோடு பண்ணிட்டு இருக்கேன்.

பப்ளிசிட்டிக்காக எல்லாம் பண்ணலை... என் மன நிம்மதிக்காகத்தான் பாடுறேன். சிலர் நினைக்கலாம்... நான் பாட்டையே பாழாக்குறேன்னு. அதையெல்லாம் பொருட்படுத்துறதில்ல. ஏன்னா, யாரையும் புண்படுத்தணும்னு நினைச்சு நான் இதைச் செய்றதில்ல. எனக்குப் பிடிச்ச பாட்டை, எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் பாடுறேன். அதுல என்ன தப்பு? என்னைப் பலரும் கலாய்க்கிறாங்கதான். பண்ணட்டுமே... அதனால என்ன? எல்லாத்தையும் தாண்டி இப்போ நான் உலகப் பிரபலம். நான் எங்க போனாலும் என்னை அடையாளம் தெரிஞ்சுக்கிறாங்க, என் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க. ‘இந்தக் குரலில் எப்படிப் பாடுறது’னு நான் நினைச்சிருந்தா, இதெல்லாம் சாத்தியமாகியிருக்குமா?!

பாட்டைவிட எனக்கு டான்ஸ் நல்லா வரும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் பிறந்தநாளில் என்னை டான்ஸ் ஆடவெச்சு என் ஃப்ரெண்ட் எடுத்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டார். இப்போ அதுவும் உலகம் முழுக்க வலம் வருது.

`‘இதெல்லாம் டான்ஸா?’னு கேட்கிறீங்களா.. அப்போ நானே இவ்ளோ ஹிட் அடிக்கும்போது, நீங்க எல்லாம் இணையத்தில் என்னென்ன புரட்சி செய்யலாம். கமான்!’’

- ஸ்மைலியுடன் `பை’ சொல்கிறார் கல்பனா அக்கா!

சா.வடிவரசு  படங்கள்:பாரதிராஜா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
டிடெக்டிவ் லேடி!
கருணை மனுஷி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close