Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

பண்டிகை என்பது விடுமுறை நாள் மட்டும்தானா?

சென்ற தலைமுறை தீபாவளிக் கொண்டாட்டங்களில் இருந்து இன்றைய ‘தீவாளி’ எந்தளவுக்கு விலகிப்போய்க் கிடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார் சென்னையைச் சேர்ந்த மூத்த பட்டிமன்றப் பேச்சாளர், அண்ணா சிங்காரவேலு.

“பண்டிகை என்பது சுற்றமும் சொந்தமும் சேர கொண்டாட வேண்டிய ஒரு மகிழ்ச்சியான தருணம். ஆனால், அதனை இன்னொரு விடுமுறை நாளாக மட்டுமே பார்த்து வரும் நாம், நமது பாரம்பர்யத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத் தவறிவிடுகிறோம். முன்பெல்லாம் தீபாவளி கொண்டாடும்போது நம் தெருவில் உள்ள ஒவ்வொரு வீடும் ஒரே குடும்பம் போல ஒன்றுசேர்ந்து கொண்டாடினோம். இன்று ஒரு குடும்பத்து உறுப்பினர்களிலேயே ஒருவர் ஊரில் இருந்துகொண்டு, தொலைத்தொடர்பு கருவிகளில் வாழ்த்துகள் பகிர்ந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சொல்லப்போனால், பண்டிகை தினங்களில் உறவுகள், நட்புகள் மட்டுமின்றி, புதியவர்களையும் நம் வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பண்டிகை என்பதை மகிழ்ச்சியுடன் தொடங்கி கொண்டாட்டமாக மாற்ற வேண்டும்!’’ என்று வலியுறுத்தும் சிங்காரவேலு,

 ‘‘தீபாவளிக் கொண்டாட்டத்தின் புராணம் அறிவோமா..?

 பாரம்பர்யமாக கொண்டாடினால் என்னென்ன நன்மைகள்..?

 வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி அனுபவம் என்று அனைவருக்கும் ஒன்று இருக்கும் அல்லவா..?

 தீபாவளி... அன்றும் - இன்றும் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா..?

 வெளிநாடுகளில், தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்கள் எப்படி உள்ளன..?

 ஆடம்பர தீபாவளி சரியா..?

 தீபாவளி நமக்கு உணர்த்தும் கருத்து என்ன..?’’

- இப்படிக் கொண்டாட்டப் பொழுதுகளைப் பற்றிய தன் அனுபவ வார்த்தைகளை, கலாசாரத் தழுவலோடு ‘கலங்காதிரு மனமே’ குரல் ஒலியில் நவம்பர் 3 முதல் 9 வரை பகிர்கிறார் அண்ணா சிங்காரவேலு. 044 - 66802912* எண்ணில் அழையுங்கள்!

ச.சந்திரமௌலி   படம்:மீ.நிவேதன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மெகா பரிசுப் போட்டி!
ஒரு டஜன் யோசனைகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close