Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் போட்டோவை திருடினால் சந்தோஷம்!

போட்டோகிராஃபி

புகைப்படக் கலைஞர்களின் பிரச்னைகளுள் ஒன்று... அவர்களின் படைப்புகளைத் திருடி பிறர் பயன்படுத்துவது. ‘இது என் போட்டோ, எனக்கு கிரெடிட் கொடு’னு இணையத்தில் நிறைய பஞ்சாயத்துகள் நடக்கும். ஆனால், ``என் போட்டோவை யாராச்சும் திருடுவாங்களானு ஏங்கியிருக்கேன்!’’ என்கிறார், நெய்வேலியைச் சேர்ந்த ஸ்ட்ரீட் போட்டோ கிராஃபர் அனிதா சத்யம்.

``ஒரு போட்டோ நல்லா இருந்தாதானே திருடுவாங்க! ஆரம்ப நாட்களில் அதுக்காக என் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட புலம்பியிருக்கேன். இப்போ என் போட்டோவையும் திருட ஆரம்பிச்சுட்டாங்க. அனிதா ஹேப்பி அண்ணாச்சி! என்று சொல்லி கலகலவெனச் சிரிக்கும் அனிதா, போட்டோகிராஃபியை ஒரு பேஷனாக எடுத்துக்கொண்டு `கிளிக்’ செய்துகொண்டிருப்பவர்.

‘‘பிறந்து வளர்ந்தது புனே. கல்யாணமாகி நெய்வேலிக்கு வந்து 22 வருஷமாச்சு. அப்பாவுக்கு போட்டோகிராஃபியில் ஆர்வம். அவரைப் பார்த்து எனக்கு கேமரா பைத்தியம் பிடிச்சிருச்சு. பத்தாவது படிக்கும்போது என் கையில் கேமரா தந்தார் அப்பா. இப்போவரைக்கும் `கிளிக்'கிட்டே இருக்கேன். நெய்வேலியை சுத்தியிருக்கும் கிராமங்களில்தான் என் `கிளிக்’ வேட்டை. பையனையும், பொண்ணையும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, ஸ்கூட்டியை எடுத்துட்டு, உலகமே என் கேமராவுக்காகக் காத்திருக்கிற மாதிரி ஆசையும், ஆர்வமுமா போய் புகைப்படங்கள் எடுப்பேன்.

அஞ்சு வருஷத்துக்கு முன்ன, புகைப்படங்களை எல்லாம் ஃபேஸ்புக்ல அப்லோடு பண்ணினேன். மத்த போட்டோகிராஃபர்ஸோட நட்பு கிடைச்சது, அவங்க படங்களை எல்லாம் பார்த்து நிறையக் கத்துக்கிட்டேன்’’ எனும் அனிதாவின் ஒரு பிளாக் அண்ட் வொயிட் போட்டோவுக்கு, நாகர்கோவிலில் நடந்த போட்டோ எக்ஸ்போவில் ‘பெஸ்ட் போட்டோ ஆஃப் த டே’ விருது கிடைத்ததுடன், தன் புகைப்படங்களுக்காக பல அங்கீகாரங்களையும் பெற்று வருகிறார்.

‘‘என்னோட ஸ்பெஷல், ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி. குறிப்பா, பெண்களின் இயல்பு வாழ்க்கையை படம் எடுப்பதில் எனக்கு ரொம்பவே ஆர்வம். எளியநிலைப் பெண்கள் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்காங்க. படத்துக்கு கிடைக்கிற பாராட்டுக்களைவிட, என் பயணத்துக்கு ஊடான இந்த அனுபவங்களை நான் அதிகமா நேசிக்கிறேன்!’’

- ஆட்காட்டிவிரலால் ‘க்ளிக்’கிக் காட்டுகிறார் அனிதா.

- கே.அபிநயா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
டீச்சிங்... ஷூட்டிங்... லாஃபிங்...
"கேப்டன்கிட்ட பிடிச்சது அவரோட எளிமை!"
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close