Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

ளநீர் அல்லது தேங்காய் உடைத்த நீர் சேர்த்து கோதுமை மாவைப் பிசைந்து சப்பாத்தி செய்தால்... மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

- நிர்மலா, மதுரை

தீப்புண் கொப்புளிக்காமல் இருக்க ஓர் உபாயம். தீ பட்ட இடத்தை நீரால் கழுவிவிட்டு... வேகவைத்த வெங்காயத்தை மசித்து, சிறிது தேங்காய் எண்ணெயையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்துக் குழைத்துப் பூசினால்... புண் கொப்புளிக்காமல் இருக்கும்.

- எம்.வசந்தா, சென்னை-64

முட்டைகோஸை சாறு எடுத்து, முகத்தில் தடவி வந் தால்... முகச்சுருக்கம் மறையும்.

- எம்.கிருஷ்ணவேணி, பெரியாக்குறிச்சி

மெழுகுவர்த்தியை ஏற்றுவதற்கு முன் அதன் திரியில் கொஞ்சம் டேபிள் சால்ட் தடவினால், அது நீண்ட நேரம் பிரகாசமாக எரியும்.

- அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு

ண்டிகைக்கு மைசூர்பாக், லட்டு, பர்ஃபி செய்யும்போது விழும் துகள்களை, சுண்ட காய்ச்சிய பாலில் சேர்த்து பாயசமாக செய்தால்... சுவையோ சுவை!

- எஸ்.வத்சலா, சிட்லபாக்கம்

பூரி மசாலா செய்யும் போது சிறிது கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள்... நல்ல வாசனையாகவும், கூடுதல் சுவையாகவும் இருக்கும்.

- எம்.அகமது சுலைஹா, ராமநாதபுரம்

குலாப் ஜாமூன் மிக்ஸை வைத்து குலாப் ஜாமூன் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அதில் உப்பு, காரம், பனீர் சேர்த்துப் பிசைந்து பொரித்தெடுத்து, ‘கிரேவி'யில் சேர்த்து அட்டகாசமான `பனீர் கோஃப்தா’ தயாரிக்கலாம்.

- கீதா ஹரிஹரன், கேரளா

காபி, டீ கொடுக்கும் பீங்கான் கோப்பை மற்றும் குக்கர் கறை படிந்துள்ளதா..? ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி நன்கு அழுத்தி தேயுங்கள். பிறகு கழுவுங்கள். கறை போயே போச்சு!

- விமலா சங்கரன், காஞ்சிபுரம்

சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கைவசம் க்ரீம் இல்லையா? சிறிது வெண்ணெயில் சிறிதளவு பாலைக் கலந்து நன்கு கலக்கி, அதை க்ரீமுக்குப் பதிலாக உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.

- எஸ்.நித்தியலக்ஷ்மி, தஞ்சாவூர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மேக்கிங் ஆஃப் அதிரசம்...
தீபாவளி லேகியம்... பிரச்னைகள் ஓடிரும்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close