Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடையால் மாறலாம்... இடையழகியாக!

சென்ற இதழைத் தொடர்ந்து இந்த இதழிலும், பப்ளி பியூட்டீஸ்களை க்யூட் பேபிகளாக மாற்றும் சில  மாடர்ன் உடைகள்...

மேக்ஸி டிரெஸ்

பப்ளியா இருக்கவங்களுக்கு மேக்ஸி டிரெஸ் போட்டா, இன்னும் குண்டா தெரியும். குறிப்பாக, இடுப்பு மட்டும் பெருத்து இருப்பவர்கள், மேக்ஸி டிரெஸ் செலக்ட் செய்யும்போது, கழுத்து முதல் இடுப்பின் மேற்பரப்பு வரை ஒரு கலரிலும், கீழ்ப்பகுதி முழுவதும் நீளவாக்கு கோடுகள் போட்ட ஸ்டிரைப் டிசைன் பிரின்ட் டிரெஸ்ஸாக வாங்கிப் போடுவது நல்லது. இது உங்களை ஸ்லிம்மாக காட்டுவதுடன் உங்கள் இடுப்பின் தோற்றத்தையும் மறைத்துவிடும்.

டர்டில் நெக் டாப்

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஃபேஷன் உலகில் எவர்க்ரீன் ஸ்டைல்னா அது டர்டில் நெக் டாப்தான். பப்ளி கேர்ள்ஸ் இந்த டாப்புடன் பேன்ட் போடுவதைவிட... ஸ்கர்ட், அதுவும் நிறைய லேயர்ட் ஸ்கர்ட்டாக இல்லாமல் மாடல் போட்டிருப்பதை போன்ற அன் ஈவன் ஸ்கர்ட் போடலாம். அதேபோல் உங்கள் டாப்ஸை இடுப்புப் பகுதியில் ஒருபக்கம் மட்டும் சற்று தூக்கி சுருட்டிவிட்டால் `இஞ்சி இடுப்பழகி’ பட அனுஷ்கா போல் இல்லாமல், இன்ச் இடுப்பழகியாகலாம்.

ஷிஃப்ட் டிரெஸ்

ஃபிட்டாக இல்லாத இந்த மாதிரியான ஷிஃப்ட் டிரெஸ், நீங்க பப்ளியா இருக்கறதை சுத்தமா மறைச்சிடும். அதே மாதிரி பிளெய்ன் ஷிஃப்ட் டிரெஸ்ஸைவிட மாடல் போட்டிருப்பதுபோல் ஃப்ளோரல் டிசைன் பிரின்டட் டிரெஸ் போட்டால், உங்க ஃப்ரெண்ட்ஸ் மத்தியில நீங்கதான் சோ... கியூட் பேபி!

மாடல்: ஃபரீனா

உதவி: கேஷுவல் டேஸ்,

பெரம்பூர், சென்னை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
`மைக்ரோவேவ் அவன்'...
மின்சாரம், எரிவாயு, மினரல் வாட்டர்...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close