Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டில் புடவை பிசினஸ்... விரைவில் ஷோரூம்!

சதிக்குக் குறைவில்லை. ஆனாலும், அருணா ராஜரத்தினத்துக்கு ‘வீட்டில் சும்மா இருக்காமல் ஏதாவது செய்யலாமே!’ என்ற உறுத்தலும் உந்துதலும் உள்ளூர அழுத்தியதன் விளைவுதான், சென்னை, அபிராமபுரத்தில் மலர்ந்திருக்கும் ‘ஸ்ரீங்காரம்’.

தேர்ந்தெடுக்கப்பட்ட புடவைகள், சல்வார்கள் என்று கொட்டிக்கிடக்கும் பொட்டிக்!

‘‘என் கணவர், பிரபல சேனலின் இயக்குநர்களுள் ஒருவர். எங்களுக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். எல்லோரையும் ஆளாக்குற வரைக்கும் ஒரே ஓட்டம்தான். எதுக்கும் நேரமே இருந்ததில்ல. பொண்ணுங்க எல்லாம் புகுந்த வீட்டுக்குப் போய், பையனும் படிக்கிறதுக்குப் போனதும், நேரத்தை வீணா செலவழிக்கப் பிடிக்கல. என் பொண்ணுங்களுக்கு நான் செலக்ட் பண்ற புடவைகளை, என் தோழிகள் எல்லோருமே ‘ரொம்ப நல்லாயிருக்கு... எங்க கிடைக்குது உனக்கு மட்டும் இப்படி டிசைன்ஸ்?’னு கேட்டுப் பாராட்டுவாங்க. அப்படிக் கேட்கிறவங்களுக்காக புடவைகளை வாங்கிட்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சேன். அது அப்படியே விரிவாகி, புடவைகளை வீட்டில் வெச்சு சேல்ஸ் பண்ற அளவுக்கு வந்தது.

அப்போதான் என் ரெண்டாவது பொண்ணு நாச்சியம்மை, ‘ஸ்ரீங்காரம்’ங்கிற பேர்ல ஃபேஸ்புக்ல புடவைகளைப் பதிவேற்றி, ஃப்ரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணுச்சு. நிறையப் பேர் ஆர்டர் பண்ணினாங்க. சென்னை மட்டுமில்லாம வெளியூர், வெளிநாட்டில் இருந்தெல்லாம் கஸ்டமர்ஸ் பெருகினாங்க. வீட்டில் தனியா ஒரு அறையில் வெச்சு நடத்திட்டிருந்த புடவை பிசினஸைப் பெரிசா பண்ணலாம்கிற தைரியத்தை, அந்த ஃபேஸ்புக் வாடிக்கையாளர் கூட்டம் கொடுத்துச்சு. அதுவரை ‘சாஃப்ட் சேல்’ ஆக இருந்த ‘ஸ்ரீங்காரம்’, இதோ இங்கே இப்போ ‘ஹாட் சேல்’ ஆக மாறிடுச்சு!

கடை ஆரம்பித்த ஆறு மாதங்களில், நல்ல பிக்அப். ரூபாய் 300-ல் தொடங்கி ரூபாய் 20,000 வரையிலும் இங்க புடவைகள் இருக்கு. தவிர, சல்வார் மெட்டீரியல், குர்திகளும் ரூபாய் 500 முதல் இருக்கு. இப்போ பிளவுஸுக்கான டெய்லரிங் யூனிட்டும் ஆரம்பிச்சிருக்கோம். புதிய டிசைன்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, அதன் மூலம் வரும் ஆர்டர்களுக்கு கூரியர் மூலம் புடவைகளை அனுப்புறோம். நடுத்தரக் குடும்பத்துப் பெண்களும் பொட்டிக் வரணும்... அதுக்கேற்ற வகையில், விலையில் இந்த பொட்டிக்-ஐ உருவாக்குறதுதான் என் ஆசை!’’ என்கிறார் அருணா.

வீட்டில் புடவை பிசினஸ், ஃபேஸ்புக்கில் விளம்பரம், வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்கள், விரைவில் ஷோரூம் என்ற அருணாவின் வெற்றி ஃபார்முலாவை, ‘ஏதாவது செய்யலாமே..?’ என்ற தேடலில் இருக்கும் மற்ற இல்லத்தரசிகளும் குறித்துக்கொள்ளலாம்!

சினிமா - டி.வி. பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என ஸ்ரீங்காரத்துக்கு வரும் ரெகுலர் வி.ஐ.பி. கஸ்டமர்கள் ஏராளம்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஷேரிங் நல்லது!
வீடியோ லேடியோ
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close