Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்ட்டிக்கு போகலாம் பர்ஃபெக்ட்டா!

பார்ட்டிக்கு  போடுற  டிரெஸ்ல இப்போதைய ஹாட் டிரெண்ட் லாங் கவுன் கள்தான். இதற்கான சில சுவாரஸ்யமான டிப்ஸ்களை வழங்குகிறார், சென்னை - பாண்டிபஜாரில் உள்ள  `இன்ச் பொட்டிக்'கின் உரிமையாளர் சிந்தியா.

 

டிசைனர் கவுன்

சிம்பிள் டிரெஸ்ஸில் ராயல் லுக் வேண்டும் என ஆசைப்படும் பெண்களுக்கு இது பொருத்த   மாக இருக்கும். அதிலும் இரண்டு கான்ட்ராஸ்ட் கலரில் உள்ள டிரெஸ்ஸில்  முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட நெக் டிசைன், பார்ட்டியில் எல்லாரையும் உங்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

ஃப்ரீ லாங் கவுன்

 

`நான் பப்ளியா இருக்கேன் ஆனா, எனக்கும் கவுன் போட்டுக்க ஆசையா இருக்கு' என ஏங்குபவரா நீங்கள்? உங்களுக்கு டைட் ஃபிட் கவுனைவிட, இந்த ஃப்ரீ டைப் கவுன் கனக்கச்சிதமா இருக்கும். அதுவும் மல்டி கலரில் மாடர்ன் பெயின்ட் டிசைன் கொண்ட இந்த கவுன் உங்களுக்கு சூப்பர் ஸ்லிம் லுக் தரும்.

டை அண்ட் டை லாங் கவுன்

எப்பவும் மாடர்ன் லுக் வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இந்த டிரெஸ் காம்பேக்ட் கம்பேனியன். க்ளோஸ்டு ப்ளீட்ஸ் உடைய நெக் டிசைன் மற்றும் பிரைட் கலர்ஸ் உங்களுக்கு பார்ட்டியில் டால் லுக் தரும்.

சு.சூர்யா கோமதி
படங்கள்: ச.ஹர்ஷினி  மாடல்: மேக்னா

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கால் கடுக்க நிற்க வேண்டாம்... இதோ, வந்துவிட்டது இ-சேவை!
படிக்கலாம் மெக்கானிக் கல்வி
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close