Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

ச்சை மிளகாய் 3, ஒரு துண்டு பெருங்காயம், அரை ஸ்பூன் கல் உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து, பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகளோடு நன்றாகப் பிசிறி வைக்கவும். பின்னர் கடுகு தாளித்து உபயோகிக்கவும். இந்த ஊறுகாய் படுருசியாக இருக்கும்.

- சியாமளா ராஜகோபால், சென்னை-64

லர்ந்த திராட்சைப் பழங்கள் 20 எடுத்து சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு, அரை ஸ்பூன் சோம்பையும் போட்டு கஷாயம் வைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால்...மாதவிலக்கு காலத்தில் வயிறு, நெஞ்சு, விலா, முதுகுப்பக்கங்களில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- ரோஜா ராஜா, நெய்வேலி

ரு ஸ்பூன் தயிருடன் அரை தக்காளிப் பழத்தை சேர்த்து நன்கு பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையத் தொடங்கும்.

- ஸ்வாதி கனகராஜ், கோயம்புத்தூர்

வ்வரிசி பாயசம் செய்யும்போது,2 டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாக இருப்பதோடு மணமாகவும் இருக்கும்.

- பி.லாவண்யா, பம்மல்

குருமா நீர்த்துவிட்டால், அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸை போட்டுக் கொதிக்க விட்டால் கெட்டிப்பட்டுவிடும்; ருசியும் கூடும்; சத்தும் கிடைக்கும்.

- டி.நிர்மலா தேவி, சென்னை-75

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வாசகிகள் கைமணம்
மிரட்டும் டெங்கு... தப்பிக்க என்ன வழி..?
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close