Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்பிள் அண்ட் ரிச்... மிக்ஸ்டு காம்பினேஷன்!

சென்ற இதழில் கல்லூரிப் பெண்களின் ‘டெய்லி வேர்’ உடைகளை அதிக செலவு வைக்காத, ஹெவி டிசைனாக இல்லாமல், அதே சமயம் சிம்பிள் டிசைனர் ஆடையாக வடிவமைப்பது பற்றிக் கூறிய, சென்னையில் உள்ள ‘தி ஃபேர் லேடி’ டிசைனர் பொட்டீக் உரிமையாளர் ஷைனி, இந்த இதழில் காலேஜ் கல்ச்சுரல்ஸ் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு, கிராண்டாக இல்லாமல், ஆனால் ரிச் லுக்கில் டிரெண்டியாக ஆடை தேர்வு செய்வது பற்றிச் சொல்கிறார்...

“ரெகுலர் ரெடிமேட் குர்தாவா இல்லாமல், ரன்னிங் மெட்டீரியல்னு சொல்ற பேல் துணியில், விருப்பமான மெட்டீரியல் மற்றும் நிறங்களில் துணிகளை வாங்கி, நீங்களே உங்களுக்கான டாப்ஸ் எப்படி இருக்கணும்னு ஸ்கெட்ச் செய்யுங்க. இது ஒரு பெரிய விஷயமே இல்ல. எல்லாரோட கையிலும் ஸ்மார்ட் ஃபோன் இருக்கு. கூகுள்ல ‘எத்னிக் குர்த்தா டிசைன்ஸ்’னு டைப் பண்ணினா, நிறைய டிசைன்ஸ் கிடைக்கும். அதுல உங்களுக்குப் பிடிச்ச டிசைன், அல்லது அதிலிருக்கும் சில ஐடியாக்களை மட்டும் எடுத்து உங்கள் கற்பனை கலந்து நீங்களே ஒரு டிசைனை உங்க டெய்லருக்கு விளக்கிச் சொல்லி, உங்களுக்கான ஆடையை ஸ்டிட்ச் செய்து வாங்கலாம்!’’ எனும் ஷைனி வழங்கிய, சிம்பிள் அண்ட் ரிச் லுக் டிரெஸ் டிசைன்களுக்கான டிப்ஸ் இதோ...

1. கம்பீரத் தோற்றம் தரும் சந்தேரி காட்டன் மெட்டீரியலில், கழுத்து, கைகள் மற்றும் நடுப்பகுதிக்கு மட்டும் பட்டுத்துணி வைத்து தைக்கப்பட்ட சிம்பிள் குர்தா. அதை இன்னும் மெருகேற்ற, கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் ஜர்தோஸி மோட்டிஃப் (விரும்பிய வடிவத்தில்) ஒன்றை நடுவே அட்டாச் செய்திருக்கோம். கூடவே ரிச் லுக்குக்கு, தங்க ஜரிகையை பட்டுத் துணிக்கு பார்டரா பயன்படுத்தியிருக்கோம்.

2. விழாக்களுக்கு தமிழ் மற்றும் வட இந்திய டிரெடிஷனல் டிரெஸ்தான் போடணும்னு இல்ல. மாடர்னாவும் கலக்கலாம். அதுக்கு, வெஸ்டர்ன் பார்ட்டி கவுன் பெஸ்ட் சாய்ஸ். மாடல் அணிந்திருக்கும் கவுன், பட்டுத்துணியில் தைக்கப்பட்டது. முன்பக்கம் க்ளோஸ் நெக்கும், பின்பக்கம் லோ நெக்கும்தான் இப்போதைய டிரெண்ட். கூடுதலா வெல்வெட் துணியில் இடுப்புப் பகுதியில் பெல்ட் போன்ற ஒரு டிசைன். கவுனின் கீழ்ப்பகுதி முழுவதையும் நெட்டட் துணியில் ஃபிரில்ஸ் வைத்து டிசைன் செஞ்சிருக்கோம். இந்த டிரெஸ் உங்களை டிரெண்டியாவும் ராயலாவும் காட்டும்.

3. ரொம்ப மிருதுவான சந்தேரி காட்டனில் ரெண்டு வகையான டிசைனில் ரன்னிங் மெட்டீரியல் எடுத்து, டாப்ஸின் மேல்பகுதிக்கு ஒரு டிசைன், கீழ்பகுதிக்கு ஒரு டிசைன் மற்றும் கூடுதலா கோல்டன் மற்றும் கான்ட்ராஸ்ட் நிறமான சிவப்பு நிறத்தில் ஜரிகையை பார்டரா பயன்படுத்தியிருக்கோம். சிவப்பு நிறம் ஒரு டிரெடிஷனல் லுக் தரும். மாடர்னா டிசைன் செய்ய ப்ளூ அல்லது மெஜந்தா போன்ற நிற ஜரிகையைத் தேர்வு செய்யலாம். இதுல ஒரு சின்ன இன்ட்ரஸ்டிங் விஷயம்... நெட்டட் மெட்டீரியலில் உள்ள ‘ஸீ த்ரூ ஸ்லீவ்’ டிசைன். இது உங்களுக்கு டிரெடிஷனல் கலந்த டிரெண்டி லுக்
தரும்.’’

இந்துலேகா.சி
படங்கள்: இரா.யோகேஷ்வரன்   மாடல்: சங்கீதா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
இஞ்சி இடுப்பழகி...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close