Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பப்ளி கேர்ள்ஸ்... ‘ஸ்லிம் சிண்ட்ரெல்லா’ ஆகலாம்!

ழகழகான மாடர்ன் உடைகள் போடணும்னா மாடல் மாதிரி `சிக் பியூட்டியா’தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. பப்ளியான பொண்ணுங்களை, கியூட்டா மாத்தக்கூடிய மாடர்ன் டிரெஸ்கள், மார்க்கெட்ல நிறையவே இருக்கு. அவை என்ன மாதிரியான டிரெஸ்கள்னு பாக்கலாமா...

எலாஸ்டிக் வெய்ஸ்ட் பேண்ட் டாப்ஸ்

ஜீன்ஸ் போடும்போது நார்மல் டி-ஷர்ட், குர்தா மட்டும் இல்லாம இந்த மாதிரி லூஸ் ஃபிட் எலாஸ்டிக் வெயிஸ்ட் பேண்ட் டாப்ஸ், அதிலும் குறிப்பா செக்டு டிசைன்ஸ்... ஸ்லிம்மா இருக்கறவங்களைவிட பப்ளி பியூட்டீஸ்க்கு கனகச்சிதம். இதுல நீங்க ஒரு குட்டி ஹன்ஸிகாவாவே மாறிடுவீங்க.

மேக்ஸி டிரெஸ்

பொதுவா மேக்ஸி டைப் டிரெஸ் ஃபிட்டான பொண்ணுங்களுக்குதான் பொருத்தமா இருக்கும். ஆனா, பப்ளியா இருக்குற உங்களுக்கும் இந்த டிரெஸ் போடணும்னு ஆசை இருக்கா. ஒரு சின்ன சீக்ரெட்... உங்க மேக்ஸி டிரெஸ்ஸுக்கு மேல மாடல்  போட்டிருப்பது மாதிரி ஒரு லாங் ஷ்ரெக்  போட்டாலே போதும். நீங்களும் ஸ்லிம் சிண்ட்ரெல்லாதான்.

மினி டிரெஸ்

பப்ளியா இருக்கும் பொண்ணுங்களை பாத்தாலே கொஞ்சம் குள்ளமா இருக்கறதுபோல இருக்கும். அதை மேஜிக் செய்து மாற்றத்தான் இந்த மினி டிரெஸ். இது உங்களுக்கு நீண்ட கால் இருப்பது போன்ற தோற்றம் தருவது மட்டும் இல்லாம உங்களை இளமையாவும் காட்டும். தினசரி கல்லூரிக்கு, ஈவ்னிங் பார்ட்டிக்கு, ஃபிரெண்ட்ஸோட அவுட்டிங்னு எங்கேயும் போடறதுக்கு ஏத்த டிரெஸ்.

இந்துலேகா.சி, படங்கள்: எம்.உசேன்
மாடல்: ஃபரீனாm, உதவி: கேஷுவல் டேஸ், பெரம்பூர், சென்னை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மண்பாண்டம் பெஸ்ட்... அலுமினியம் அவாய்ட்!
ஸ்மார்ட்போன்... பிள்ளைகளை `ஸ்மார்ட்’டாக வழிநடத்துவது எப்படி?
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close