Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு; ரூ 100

பஜ்ஜி மாவில் பொடியாக நறுக்கிய புதினா, ஓமவல்லி இலை அல்லது வெற்றிலை சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும்.

- என்.விசாலாட்சி, கொல்கத்தா


கேரட், பீட்ரூட், சீஸ் ஆகியவற்றைத் துருவும்போது, துருவும் கட்டையில் சிறிது எண்ணெய் தடவி துருவினால்... எளிதில் விழுந்துவிடும். கழுவுவதும் சுலபம்; ஒட்டிக்கொள்ளாமலும் இருக்கும்.

- எழிலா அறிவழகன், நெய்வேலி


அரிசி ரவை உப்புமா செய்யும்போது அரிசி ரவையில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி பிசிறி வைத்துக்கொண்டு உப்புமா செய்தால், கட்டிதட்டாமல் பொலபொலவென்று வரும்.

- மாலா பழனிராஜ், சென்னை-127


புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து, பனங்கல்கண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால்... இரவில் நல்ல உறக்கம் வரும்; நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

- ஆர்.கீதா, கேரளா


10 மிளகுடன் ஒரு கைப்பிடி பொரிகடலை (பொட்டுக்கடலை) சேர்த்து பொடியாக்கி, ஒரு ஸ்பூன் வீதம் 3 வேளை சாப்பிட்டால், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- தில்ஷாத் முஸ்தபா, நெய்வேலி


 

ஏலக்காயை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து பிறகு எடுத்து பொடித்தால், தோல் இல்லாமல் நன்றாகப் பொடிக்க வரும்.

- எஸ்.நித்யலட்சுமி, தஞ்சாவூர்


பாதுஷா செய்யும்போது மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, சிறிதளவு வனஸ்பதியையும் சூடு செய்து சேர்த்தால்... பாதுஷா மிருதுவாகவும், நல்ல சுவையுடனும் இருக்கும்.

- மு.பிச்சையம்மாள், தேனி


பித்தளைப் பாத்திரங்களை அரிசி மாவு அல்லது கேழ்வரகு மாவு, எலுமிச்சைச் சாறு சேர்த்து தேய்த்தால்... பளிச்சோ பளிச்!

- நவீனா தாமு, பொன்னேரி


ஆசை ஆசையாக அரைத்த இட்லி மாவு, உளுந்துப் பற்றாக்குறையால், கெட்டியாகி விடுகிறதா..? வறுக்காத அப்பளங்களை தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் ஒரு நிமிடம் அரைத்து, இட்லி மாவுடன் கலந்து பாருங்கள்... இட்லி சூப்பராக வரும்.

- சித்ரா வேடியப்பன், ஊதப்பூண்டி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அயோடின் பொட்டு!
ஹலோ வாசகிகளே...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close