Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேங்காய்நார் தொழில்... தெளிவான வழிகாட்டி!

பிசினஸ்

‘பெண்களால் எல்லாம் முடியும்!’ என்பதற்கு மற்றுமோர் உதாரணம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த சந்திரகலா. இவர் 99 சதவிகிதம் பெண் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தி நடத்தி வரும் தேங்காய்நார் கயிறுத் தொழிலால் பல குடும்பங்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றன.

‘‘என்னைப் பற்றி எழுதுவதைவிட, இந்தத் தொழில் பற்றிய தகவல்களை தெரியப்படுத்தினால், சுயதொழில் தேடலில் இருக்கும் தோழிகளுக்கு வெளிச்சமாக அமையும்!’’ 

- தீர்மானப் பேச்சு போலவே, செயலிலும் அவர் வெளிப்படுத்தும் தீர்மானமும் திருத்தமும்தான் சந்திரகலாவை வெற்றியாளர் ஆக்கியிருக்கிறது.

இனி, ஓவர் டு சந்திரகலா...

அறிமுகம்!

‘‘இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய்நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்தத் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு. நவீன இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் தேங்காய்நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறு களிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சி

காரணமாக கட்டடங் களுக்கு சாரம் அமைக்ககயிறுகள் பயன்படுத்தப் படும் வழக்கம் குறைந்த தாலும், தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது.

அடிப்படை!

இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளுக்கு நான்கு மாதங்கள் தேவைப் படும். ஆண்டுக்கு சுமார் 140 டன் தேங்காய்நார் கயிறு உற்பத்தி செய்யும் வகையிலான யூனிட் தொடங்க, 20 சென்ட் நிலம் தேவை. சொந்தமாக இடமிருந் தால் நல்லது. அல்லது குத்த கைக்கோ, வாடகைக்கோ எடுத்துக்கொள்ளலாம். தொழிற்சாலை, அலுவல கம், ஸ்டோர் ரூம் போன்றவற் றுக்காக 1,200 சதுர அடி ஷெட் தேவைப்படும்.

தயாரிக்கும் முறை!

முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து, இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து வில்லோயிங் (வில்வாங்கி) எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் கிடைக்கும். அந்த நாரை சில்வரிங் மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு ரெடி.

இயந்திரங்கள்!

வில்லோயிங் (வில்வாங்கி), சில்வரிங், ஸ்பின்னிங் மற்றும் உலர வைக்கும் இயந்திரம் போன்றவை தேவைப்படும். இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் தமிழகத்திலேயே, குறிப்பாக பட்டுக்கோட்டையிலேயே கிடைக்கின்றன.

மூலப்பொருள்!

தஞ்சாவூர், மதுரை, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோவை மாவட்டங் களில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து தேங்காய் மட்டைகளை வாங்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 1.30 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை ஓர் ஆண்டுக்கு கிடைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 1.90 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, மூலப்பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்காது.

புதிதாக யூனிட் வைக்க நினைப்பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் 130 டன் தேங்காய் மட்டை வரை தேவைப்படும்.

வேலையாட்கள்!

திறமையான தொழிலா ளர்கள் தேவை. பெண்களை, விவசாயக் கூலித் தொழி லாளர்களை இதில் பயன்படுத்திக்கொள்ளலாம். இயந்திரங்களை எப்படி இயக்குவது என்பதை, இயந்திரங்களை சப்ளை செய்யும் நிறுவனமே தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்தில் கற்றுத் தந்துவிடும்.

ரிஸ்க்!

சீஸன், போக்குவரத்துக் காரணங்களால் சமயங்களில் மூலப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். இயந்திரங் கள், மின்சாரம், அலுவலக உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற விதங் களில் 5% வரை எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

மார்க்கெட்டிங்!

நம் தயாரிப்புப் பொருளை கேரளாவில் இருக்கும் தேங்காய்நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம். தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய் நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர்.

ஏற்றுமதியிலும் கலக்கலாம்!

மண் அரிப்பைத் தடுக்கும் வலைகள் மற்றும் பழத் தோட்டங்களில் கொடிகள் படர்வதற்கும் தேங்காய்நார் கயிறு பயன்படுகிறது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகளவில் 3,50,000 டன்கள் ஜியோ - டெக்ஸ்டைலுக்கான சந்தை இருக்கிறது. ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிப்பில் சிந்தெடிக் மெட்டீரியல் மூலம் தயாரித்த பொருட்களுக்குப் பதில், தேங்காய் நார் மூலம் தயாரிப்பது தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது.    இதனால் உலகளவில் இந்தப் பொருளுக்கான டிமாண்ட் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில் கிடையாது என்பதோடு அங்கு ஆரம்பித்தால் அதிக செலவு ஏற்படும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம். எதிர்காலத்தில் ஃபிலிப் பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளில் இந்தத் தொழில் தொடங்கப்பட்டாலும் நமக்கு அதிகம் பாதிப்பிருக்காது.

ஃபைனான்ஸ்!

மொத்த மூலதனத்தில் 5% கையிலிருந்து போட வேண்டும். அந்த வகையில் இந்தத் தொழில் தொடங்குபவர் சுமார் 58,000 ரூபாய்வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மூன்று லட்ச ரூபாய், அதாவது 30% வரை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் மூலம் மானியம் கிடைக்கும். 10 லட்சத்துக்கு மேல் 25 லட்சத்துக்குள் எனில் 10% மானியம் கிடைக்கும். இந்த மானியத்தொகையானது வங்கியில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த மானியத்தொகை வங்கியில் வாங்கிய கடனுக்கு

வரவாக டெபாசிட் செய்யப் படும். மானியத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் காலகட்டத்தில் அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி பிடிக்கப்பட மாட்டாது. 65% வரை, அதாவது 6.50 லட்சத்துக்கு மட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க வேண்டியதிருக்கும்.

நிகர லாபம்!

மொத்த விற்பனையில் 15 - 20%!’’

-தெள்ளத்தெளிவாக சொல்லி முடித்தார் சந்திரகலா.

கட்டுரை மற்றும் படங்கள்: பெ.மதலை ஆரோன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நமக்குள்ளே!
கம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close