Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஷன் டெக்னாலஜி...

படிப்பும் வேலைவாய்ப்பும்!

‘இது மாதிரியும் இல்லாம, அது மாதிரியும் இல்லாம நாங்க வேற மாதிரி எதிர்பார்க்கிறோம்’ என எதிலும் புதுமையை எதிர்பார்க்கும் இளசுகளின் மோஸ்ட் வான்டட் கோர்ஸாக இருக்கிறது, ஃபேஷன் டிசைனிங் படிப்புகள். க்ரியேட்டிவிட்டி, ஆர்வம், தேடல் என இந்த மூன்று அம்சங்களும்  உள்ளவர்களுக்கு வாசல் திறந்து வாய்ப்புகளைத் தரும் ட்ரெண்டியான கோர்ஸ் இது. அதைப் பற்றிய தகவல்களைத் தருகிறார் சேலம் ‘ட்ரீம் ஸோன் ஸ்கூல் ஆஃப் க்ரியேட்டிவ் ஸ்டடீஸ்’ஸின் தலைவர், பைசல் அலி. 

வேலை வாய்ப்புகள்

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஃபேஷன் துறை மாணவர்களுக்கு அள்ள அள்ளக் குறையாமல் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இது மட்டுமல்லாமல், ஃபேஷன் போட்டோகிராஃபி, ஃபேஷன் ஜர்னலிசம், ஃபேஷன் கொரியோகிராஃபி, பேட்டர்ன் மேக்கிங், ஃபேஷன் ஷோ மேனேஜ்மென்ட் என வேலைவாய்ப்புகள் பல திசைகளிலும் விரிந்திருக்கின்றன. ஃபேஷன் ஸ்டுடியோ மூலம் ‘அடேங்கப்பா!’ எனும் அளவுக்குச் சம்பாதிக்கலாம். மேலும் ஃபேஷன் டிசைன் துறையோடு தொடர்புடைய ரீடெய்ல் துறையிலும் வாய்ப்புகள் ஏராளம்.

விண்ணப்பம்

ப்ளஸ் டூ-வில் எந்தப் பிரிவு எடுத்துப் படித்த மாணவர்களும் மூன்று வருடப் படிப்பான பி.எஸ்ஸி., ஃபேஷன் டெக்னாலஜி படிக்கலாம். கணினி அறிவியல், கணிதம் - உயிரியல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்கள் பி.டெக்., ஃபேஷன் டெக்னாலஜிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகள்

மத்திய அரசின் நிஃப்ட் (NIFT - National Institute of Fashion Technology), ஃபேஷன் படிப்புக்கான முதன்மைக் கல்வி நிறுவனம். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.டெக்., ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்ஸி., ஃபேஷன் டெக்னாலஜி படிக்கலாம். தவிர, பேர்ள், டிரீம்ஸோன் உள்ளிட்ட கல்லூரிகளிலும் ஃபேஷன் படிப்புகள் வழங்கப் படுகின்றன.

மேற்படிப்புகள்

இளங்கலையில் எந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களும் எம்.டெஸ் (மாஸ்டர் ஆஃப் டிசைன் ஸ்பேஸ்), எம்.எஃப்.எம் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட்) ஆகிய இரண்டு ஆண்டு முதுநிலைப் படிப்புகளில் சேரலாம். பி.இ., பி.டெக்., படித்தவர்கள் எம்.எஃப்.டெக் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி) உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம். முதுநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளும் உண்டு.

வெளிநாட்டில் படிப்பு

ஃபேஷன் படிப்பை வெளி நாடுகளில் படிக்க விரும்புபவர்கள், எல்லாவிதமான கலாசாரத்துக்கும் பொருந்திப்போகும் ஃபிரான்ஸ் நாட்டை தேர்வு செய்யலாம்.

வருமானம்

ஃபேஷன் துறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கும் ஏரியாவைப் பொறுத்து சம்பளம் வேறுபடும். குறைந்தபட்சம் 10,000, 15,000 ரூபாயில் இருந்து ஆரம்ப சம்பளமாகக் கிடைக்கப்பெறலாம். தேடலும் படைப்பாற்றலும் நிறைந்த இந்தத் துறையில் திறமையையும் வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தினால் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.

சிலபஸ்

மாணவர்களுக்கு தியரி வகுப்புகளுடன், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் ஃபேஷன் போட்டோகிராஃபி, கார்மென்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் உள்ளிட்ட செய்முறைப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

ச.ஆனந்தப்பிரியா  படங்கள்: சூ.நந்தினி 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
தாவணி - வேட்டி... செம காம்பினேஷன்ல!
ஷேரிங் நல்லது!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close