Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்...

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17

கோடிக்கணக்கான தமிழர்கள் தினமும் வாசிக்கும் ரசிக்கும் நேசிக்கும் விகடனின் பக்கங்களை அலங்கரிக்க... நீங்கள் தயாரா?

ளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கத் தருணம்... இதோ!

சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு... களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பு அளித்து, பட்டை தீட்டிப் பயிற்சிதரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.

கையில் இருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல்தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யு-டியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. செய்திகளில் இருந்து நீங்கள் தப்பவே முடியாது. அந்தச் செய்திகளைப் படிக்கும் 'வாசகர்’ நிலையில் இருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் 'செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத்தருகிறது இந்தத் திட்டம். விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கு என தனி முத்திரை பதித்து, வெற்றிப் பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம் என, தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம்வருகிறார்கள். இதோ, இது உங்களுக்கான நேரம்.

இளமைக்கு 'ஆ.வி’, உண்மைக்கு 'ஜூ.வி’, பெண்மைக்கு 'அவள்’, அறிவுக்கு 'சுட்டி’, அருளுக்கு 'சக்தி’, பொருளுக்கு 'நாணயம்’, பயணத்துக்கு 'மோட்டார்’, வளமைக்கு 'பசுமை’, நலத்துக்கு 'டாக்டர்’, அறுசுவைக்கு 'அவள் கிச்சன்’ இல்லறம் சிறக்க 'அவள் மணமகள்’ இணையத்தில் 'விகடன் டாட் காம்’, வைரல் களமான யு-டியூபில் 'விகடன் டி.வி’ என உலகின் கடைக்கோடி தமிழன் வரை நீண்டிருக்கின்றன விகடனின் கரங்கள். அதைப் பற்றிக்கொண்டு இணைந்து பயணிக்க, இது ஓர் அட்டகாசமான வாய்ப்பு.

1.7.98-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர், தற்போது (2015-2016) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2016-2017) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2015-2016-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க இயலாது. தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத் தாளை தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.3.16-ம் தேதிக்குள் எங்களுடைய பரிசீலனைக்கு அனுப்பவேண்டியது அவசியம் (விண்ணப்பத்தைப் பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல்தொடர்புக்காக உங்களுடைய தொலைபேசி அல்லது செல்பேசி எண் அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை, அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாகக் களம் இறங்க உங்களையும் அழைக்கிறோம். வாழ்த்துகள்!

ஆசிரியர்

விண்ணப்பத்தை PRINT எடுக்க படத்தை க்ளிக் செய்யவும்


 

ன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com 

மொபைலில் விண்ணப்பிக்க உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இந்த QR Code ஸ்கேன் செய்யவும்.

விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்பவேண்டியவை:

(அ) கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை, சொந்தக் கையெழுத்தில் தெளிவாகப் புரியும்படி தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும்.

1) 'தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ விஜயகாந்த் வீடியோவாக இருந்தாலும், 'அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்’ நாஞ்சில் சம்பத் வீடியோவாக இருந்தாலும் அடுத்த நிமிடமே, அது நம் செல்போனை வந்து அடைந்துவிடுகிறது. நீங்கள் பார்த்த வைரல் வீடியோக்களில் 'பெஸ்ட்’ என ஐந்து வீடியோக்களைப் பட்டியலிடுங்கள். அவை ஏன் உங்களைக் கவர்ந்தன என்பதை சுவாரஸ்யமான, செம ஜாலியான கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்.

(அல்லது)

2) ஊருக்கு நல்லது செய்யும்  பிரபலம் அல்லாத செயற்பாட்டாளர்கள் (UNSUNG HEROES), எல்லா காலங்களிலும் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். விளம்பரம் இன்றி வியத்தகு நற்பணிகள் செய்யும் அவர்கள் குறித்த விவரங்களுடன், நறுக்கென பேட்டியும் எடுத்து அனுப்புங்களேன்.

(ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், மேற்கூறிய கட்டுரையை அனுப்பத் தேவை இல்லை. அதற்குப் பதிலாக, எதிர்வரும் நாட்களில், தங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறத்திலும் தங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும்.

(இ) 'நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.

(ஈ) வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் பங்களித்த வீடியோக்களை சி.டி./டி.வி.டி வடிவில் அனுப்ப வேண்டும். (இதே விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்தால், அதற்கான லிங்க்குகளை (link) குறிப்பிட்டால் போதும்.)

 ந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத் தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 15.3.16-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவை இல்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.

அடுத்தகட்டமாக, 17.4.16-ம் தேதி அன்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கவிருக்கிறது. முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.

10.4.16-ம் தேதிக்குள் எங்களிடம் இருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  -  600 002.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஒரு டஜன் யோசனைகள்!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close