அனுபவங்கள் பேசுகின்றன !வாசகிகள் பக்கம் ரயிலுக்கு கீழே மொபைல்! சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சமீபத்தில் பயணித்தேன். சாத்தூர் நிலையத்தில் ரயில் நின்றபோது, செல்போனில் பேசியபடியே பிளாட்பாரத்தில் நடந்த ஒரு பெண், எதிரே வந்த நபர் மீது மோதிவிட, கையிலிருந்த மொபைல் போன், பிளாட்பாரம் மற்றும் எங்கள் ரயிலுக்கு இடையில் விழுந்துவிட்டது. எங்கள் ரயில் கிளம்பி னால்தான் மொபைலை எடுக்க முடியும். ஆனால், அவரோ எதிர்பிளாட்பாரத்தில் நிற்கும் ரயிலில் ஏறவேண்டும். எங்கள் ரயில் புறப்படுவதற் குள்ளாகவே அது புறப்பட்டுவிடும் என்கிற நிலையில்... வேறு வழியில்லாமல் தன்னுடைய ரயிலைத் தவறவிட்டவர், பிளாட்பாரத்திலேயே காத்து நின்றார். முக்கியமான காரியங்களில் ஈடுபடும்போது, இப்படி மொபைலில் மூழ்குவது... இதுபோன்ற ஆபத்துகளுக்குத்தான் வழி வகுக்கும் என்பதில் கவனம் இருக்கட்டும் தோழிகளே! - மங்கையர்க்கரசி, சென்னை-78 உதவி... உபத்திரவம்! பிறந்த நாளன்று புது சுடிதாரில் கலக்கலாக ஆபீஸ் கிளம்பினேன். பஸ்ஸில் உட்கார்ந்திருந்த என்னிடம், ஒரு கவரைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னார் அருகில் நின்று. . .
ரயிலுக்கு கீழே செல்ஃபோனை தவற விட்ட பெண், கழுத்தில் கயிறு போன்று 'டேக்'கில் ஃபோனை கட்டி தொங்க விட்டுக் கொண்டு வந்திருந்தால், செல்ஃபோன் கீழே விழாமல் கழுத்திலேயே தொங்கிக் கொண்டு இருந்திருக்கும்...!!! இதை எழுதும்போது ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
"அவளின் சொல்லழகிலும், பண்பிலும் பூரித்து அவள் அம்மாவைப் பார்த்தேன். 'நாந்தான் அவளுக்கு அப்படி கத்துக் கொடுத்திருக்கேன் மாமி. அப்பப்போ ஆதரவற்றோர் இல்லங்கள், குழந்தைகள் விடுதினு போய் இவ கையாலேயே ஏதாவது பொருட்கள் கொடுத்துட்டு வருவோம். அப்போதானே அந்தக் குணம் பெரியவளானதும் வரும்?!’ என்றாள்."
இது என்னவோ மிகவும் செயற்கையாக, தற்பெருமையுடன் எழுதப்பட்ட கற்பனை விஷயம் என்றே தோன்றுகிறது. ஒருவித அசூயை ஏற்பட்டது இத்னை படிக்கையில் - நல்ல விஷயம் சொல்ல, ஒரு கற்பனை நிகழ்வோ என்று.
பள்ளி விழாக்களில் பங்கு பெறும் குழந்தைகள் பற்றிக் கூறியது நூத்துக்கு நூறு உண்மை. என் பெண்ணை பள்ளி விழாக்களுக்குக் கூட்டிப் போவேன். லிப்ஸ்டிக் அழிந்து விடுமென்று ஜூஸ் கூட குடிக்க மாட்டாள். கண் மை கன்னம் வரை வழிந்து விடும். அவள் எல்.கேஜி படிக்கும்போது கிருஷ்ணர் வேஷம் போட்டிருந்தாள். சிறப்பு விருந்தினர் பரிசு கொடுக்க அழைத்தபோது அவள் என் மடியில் தூங்கி விட்டிருந்தாள். நான் எழுப்பியபோது''போம்மா எழுந்துக்க மாட்டேன்'' என்று கத்தினாள்.என் பாடு தான் திண்டாட்டம். பின் அவளைத் தூக்கியபடி மேடைக்குச் சென்று, அவளை உலுக்கி பரிசு வாங்க வைத்தேன்.
குழந்தகளின் பசி மற்றும் தூக்கம் போன்ற தேவைகளை யாரும் யோசிப்பதில்லை என்றே இந்த பள்ளி நிகழ்வின் மூலமாக தெரிகிறது. இனி மேலாவது இதைப் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர்கள், தாளாளர்கள் பொறுப்பாக நடந்து கொண்டால் சரி.
பள்ளி ஆண்டு விழா அனுபவம் பலராலும் அனுபவிக்கப்படும் ஒரு கொடுமை. அதுவும் பள்ளி ஆடல் பாடல்களில் பங்கு பெறாவிடில் குழந்தை தன்னை "தகுதியற்றவர்" ஆக எண்ணி விடுமோ என்று அவர்களை படுத்தும் பெற்றோர்கள் வேறு. ஆனால் இத்தகைய நிகழ்ச்சியில் - ஸ்நாக்ஸ் எடுத்து செல்வது வழக்கம். பசி அடங்கும். ஆனால் இதனை விட கொடுமையானது பாத்ரூம் பிரச்சினைகள். காஸ்ட்யூம் போட்டபின் அத்தனை நேரமும் பாத்ரூம் போகாமல் கஷ்டப்படும் சிறார்கள், கஷ்டப்பட வைக்கும் சர்வாதிகாரினிகள் (ஆசிரியைகள்) வேறு. சில சமயங்களில் அந்த ஆசிரியைகள் பெண்களா அல்லது வேற்று கிரகத்தவரா என தோன்றும். அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு எனினும்.
கடைசி அனுபவம் மிக மிக மிக அருமை.
விடுமுறைக்கு இந்தியா செல்லும் என் தங்கையும், கணவரும், அவர்கள் குழைந்தைகளை இது போல் அனாதை ஆசிரமம் சென்று பொருட்களை தானம் செய்ய பழக்குகின்றனர்.
COMMENT(S): 15
'நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே’
அப்போ அப்பா வளர்ப்பு..??
எத்தனைதான் ஒரு அன்னையால் செய்யமுடியும்? எல்லாத்துக்கும் அன்னைதான் பொருப்பா?
ரயிலுக்கு கீழே செல்ஃபோனை தவற விட்ட பெண், கழுத்தில் கயிறு போன்று 'டேக்'கில் ஃபோனை கட்டி தொங்க விட்டுக் கொண்டு வந்திருந்தால், செல்ஃபோன் கீழே விழாமல் கழுத்திலேயே தொங்கிக் கொண்டு இருந்திருக்கும்...!!! இதை எழுதும்போது ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
மாட்டுக்கும் மாமிக்கும் என்ன வித்தியாசம்?
--- மாடு கழுத்துல "செல்" இருக்கும்...!!
------ மாமி கழுத்துல "பெல்" இருக்கும்...!!!
"அவளின் சொல்லழகிலும், பண்பிலும் பூரித்து அவள் அம்மாவைப் பார்த்தேன். 'நாந்தான் அவளுக்கு அப்படி கத்துக் கொடுத்திருக்கேன் மாமி. அப்பப்போ ஆதரவற்றோர் இல்லங்கள், குழந்தைகள் விடுதினு போய் இவ கையாலேயே ஏதாவது பொருட்கள் கொடுத்துட்டு வருவோம். அப்போதானே அந்தக் குணம் பெரியவளானதும் வரும்?!’ என்றாள்."
இது என்னவோ மிகவும் செயற்கையாக, தற்பெருமையுடன் எழுதப்பட்ட கற்பனை விஷயம் என்றே தோன்றுகிறது. ஒருவித அசூயை ஏற்பட்டது இத்னை படிக்கையில் - நல்ல விஷயம் சொல்ல, ஒரு கற்பனை நிகழ்வோ என்று.
டிரைவர ஒரு ஆதரவற்ற அனாதை போல் சொல்லியது....too much!...பாவம் அந்த டிரைவருக்கு இது தெரிஞ்சிருக்காது...
வெங்கி சொல்வது சரிதான். அது உண்மையாக இருந்தால்தானே நமக்கும் ஒருவித உணர்வு வரும்.
பள்ளி விழாக்களில் பங்கு பெறும் குழந்தைகள் பற்றிக் கூறியது நூத்துக்கு நூறு உண்மை. என் பெண்ணை பள்ளி விழாக்களுக்குக் கூட்டிப் போவேன். லிப்ஸ்டிக் அழிந்து விடுமென்று ஜூஸ் கூட குடிக்க மாட்டாள். கண் மை கன்னம் வரை வழிந்து விடும். அவள் எல்.கேஜி படிக்கும்போது கிருஷ்ணர் வேஷம் போட்டிருந்தாள். சிறப்பு விருந்தினர் பரிசு கொடுக்க அழைத்தபோது அவள் என் மடியில் தூங்கி விட்டிருந்தாள். நான் எழுப்பியபோது''போம்மா எழுந்துக்க மாட்டேன்'' என்று கத்தினாள்.என் பாடு தான் திண்டாட்டம். பின் அவளைத் தூக்கியபடி மேடைக்குச் சென்று, அவளை உலுக்கி பரிசு வாங்க வைத்தேன்.
செல்பேசி யமனை அழைக்கும் பேசி...பயணங்களில்!..
ஒரு சக்கரத்தின் பின்னிருந்து நான்கு சக்கரங்களை இயக்கும் ஓட்டுநர் பால் அக்கறை செலுத்துவது பயணிப்போர்க்கு பாதுகாப்பு!...