அனுபவங்கள் பேசுகின்றன ! வாசகிகள் பக்கம் காமெடி குழந்தை! சமீபத்தில் கணவருடன் கலகலப்பான ஒரு காமெடி படத்துக்குச் சென்றிருந்தேன். அருகிலிருந்த ஸீட்களில்... நான்கு வயதே இருக்கும் குட்டிப் பெண்ணுடன் ஒரு தம்பதி. காமெடி காட்சிகளில் அக்குழந்தையின் அப்பா சிரிக்கும்போதெல்லாம், ''எதுக்குப்பா சிரிக்கிறே?'' என்று வினாக்களால் நச்சரித்துக் கொண்டே இருந்தது வாண்டு. ஒவ்வொரு தடவையும் வாண்டு எழுப்பும் கேள்வி... அவள் பக்கமே எங்கள் கவனத்தை ஈர்த்தது. க்ளைமாக்ஸ் காட்சிகளின்போது... தந்தை மிக அதிகமாக குலுங்கி குலுங்கிச் சிரிக்க, குட்டியும் மிக அதிக கோபமாகி, ''சிரிக்காதேப்பா!'' என்று கத்த ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளை சற்று விவரம் தெரிந்த பின்னர் காமெடி படங்களுக்கு அழைத்து வந்தால், தொந்தரவும் இருக்காது, அவர்களும் புரிந்து படத்தை ரசிப்பார்கள்! சரிதானே..?! - மங்கையர்க்கரசி, சென்னை-78 நாசூக்காக நல்ல செய்தி! மதுரையிலிருக்கும் அண்ணன் வீட்டுக்கு, சில மாதங்களுக்கு முன் சென்றிருந்தேன். பக்கத்து ஃப்ளாட்டில் குடியிருக்கும் பெண்மணி, தான் கோவையில் புறநகர் பகுதியில் வீடு கட்டி. . .
குட்டி பிள்ளைகள் கிட்ட "நீ சமத்து குட்டில்ல? பாப்பாவை தொடாம விளையாடனும் என்ன?" என்றால் கேட்டுக்கொள்ளும்.
ஒன்றிரண்டு கேட்காமல் வம்பு பண்ணினாலும் அதட்டினாலோ அல்லது பிருஷ்டத்தில் ஒன்று வைத்தாலோ அடங்கும்.
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் அடுத்த வீட்டு பிள்ளையை முத்தம் கொடுப்பதில்லை.
பழைய காலத்து பாட்டிகள் தான் பண்ணுவது, Please don't touch - சொன்னாலும் "நாங்கல்லாம் புள்ள பெக்கலியா இல்ல வளக்கலியா? ஊருல இல்லாத புள்ளைய பெத்துப்டாளாம்" என பேசுவார்கள்.
நாங்கள் சிங்கப்பூரில் இருக்கிறோம். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு குழந்தை பிறந்த போது என் மாமியார் சென்னையிலிருந்து வந்திருந்தார். எப்பொழுதும் குழந்தையை முத்தம் கொடுத்து கொஞ்சிக் கொண்டே இருப்பார். இரு கன்னங்களிலும் சிவப்பாக தடித்தும், பொரிபொரியாகவும் வந்து, டாக்டரிடம் காட்டி மருந்து தடவ கொடுத்தார். நான் மாமியாரிடம் முத்தம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி பார்த்தேன். அவர் நான் என்ன எச்சிலா வைக்கிறேன், முத்தத்தினால் இது வரவில்லை. இதற்கு கரப்பு என்று பெயர். கழுதை பால் வைத்தால் சரியாகும் அல்லது அம்மா வெற்றிலையுடன் கச்தூறியோ என்னவோ சாப்பிடனும் என்று சொன்னார். நல்ல வேளை சிங்கப்பூரில் இது எல்லாம் கிடைக்காது என்பதால் நான் தப்பித்தேன். குழ்ந்தை தான் பாவம். குளிபதற்கு முன்னால் ஒரு ஆயின்ட்மென்ட், குளிக்கும் போது சோப்பிற்கு பதில் முகத்துக்கு வேறு ஒரு ஆயின்ட்மென்ட் என்று மிகவும் கஷ்டப்படுத்தி விட்டோம் .நான்கு மாதத்திற்கு பிறகு சரியாகி விட்டது.மூன்று மதத்தில் அவர் சென்னைக்கு போய்விட்டார். இது தான் காரணம் என்று எனக்கு இப்பொழுது தான் புரிகிறது.திருமதி ராஜு.
ஆனால் குழந்தையின் கன்னத்தை விட முத்தம் தருவதற்கு சிறப்பானது ஏது? >>>
இலவம் பஞ்சு வெட்கித் தலைகுனியும் அளவிற்கு மிருதுவான பஞ்சு போன்ற உள்ளங்கால்கள்!
உங்களது சுட்டு விரலை மட்டும் எடுத்து அந்தப் பாதங்களில் மென்மையாக வைத்து தடவிப் பாருங்கள், அதன் சுகமே தனி. அந்தக் குறுகுறுப்பில் காலை ஆட்டிப் பார்க்கும் குழந்தையின் செய்கை இனிமை! பின் இரண்டு கால்களையும் ஒரு சேர சேர்த்து அந்த உள்ளங்கால்களில் முத்தம் கொடுங்கள், சொர்க்கத்தின் வாசல் அருகில் வரை சென்று வருவீர்கள்.
ஒவ்வொரு அனுபவத்தின் கடைசியிலும் "சரிதானே" "யோசிப்போமா" "உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா" என்னும் ஃபினிஷிங் பஞ்ச் கொடுத்திருப்பதில் சப் எடிட்டரின் கைவண்ணம் தெரிகிறது.
COMMENT(S): 13
கன்னத்தில் முத்தமிட்டால்.....இந்த தலைப்பு சரியாக இருக்குமா?
ஹாஹாஹா புவனேஷ்வர்!வாய் விட்டு சிரித்தேன்!
ஆனால் குழந்தையின் கன்னத்தை விட முத்தம் தருவதற்கு சிறப்பானது ஏது?
ஆஹா! ரொம்ப நன்றி. முத்தமே குடுக்க வேணாம் (ஆணியே புடுங்க வேணாம்!!!!)
:-))
அட தொடவே வேணாங்கரேன், இதுல முத்தம் வேறயா? குறிப்பா நம்ம இந்தியக்கிழவிகள் இருக்காங்களே....... அவங்க தான் ரொம்ப அடம் பண்ணறது.
குட்டி பிள்ளைகள் கிட்ட "நீ சமத்து குட்டில்ல? பாப்பாவை தொடாம விளையாடனும் என்ன?" என்றால் கேட்டுக்கொள்ளும்.
ஒன்றிரண்டு கேட்காமல் வம்பு பண்ணினாலும் அதட்டினாலோ அல்லது பிருஷ்டத்தில் ஒன்று வைத்தாலோ அடங்கும்.
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் அடுத்த வீட்டு பிள்ளையை முத்தம் கொடுப்பதில்லை.
பழைய காலத்து பாட்டிகள் தான் பண்ணுவது, Please don't touch - சொன்னாலும் "நாங்கல்லாம் புள்ள பெக்கலியா இல்ல வளக்கலியா? ஊருல இல்லாத புள்ளைய பெத்துப்டாளாம்" என பேசுவார்கள்.
நாங்கள் சிங்கப்பூரில் இருக்கிறோம். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு குழந்தை பிறந்த போது என் மாமியார் சென்னையிலிருந்து வந்திருந்தார். எப்பொழுதும் குழந்தையை முத்தம் கொடுத்து கொஞ்சிக் கொண்டே இருப்பார். இரு கன்னங்களிலும் சிவப்பாக தடித்தும், பொரிபொரியாகவும் வந்து, டாக்டரிடம் காட்டி மருந்து தடவ கொடுத்தார். நான் மாமியாரிடம் முத்தம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி பார்த்தேன். அவர் நான் என்ன எச்சிலா வைக்கிறேன், முத்தத்தினால் இது வரவில்லை. இதற்கு கரப்பு என்று பெயர். கழுதை பால் வைத்தால் சரியாகும் அல்லது அம்மா வெற்றிலையுடன் கச்தூறியோ என்னவோ சாப்பிடனும் என்று சொன்னார். நல்ல வேளை சிங்கப்பூரில் இது எல்லாம் கிடைக்காது என்பதால் நான் தப்பித்தேன். குழ்ந்தை தான் பாவம். குளிபதற்கு முன்னால் ஒரு ஆயின்ட்மென்ட், குளிக்கும் போது சோப்பிற்கு பதில் முகத்துக்கு வேறு ஒரு ஆயின்ட்மென்ட் என்று மிகவும் கஷ்டப்படுத்தி விட்டோம் .நான்கு மாதத்திற்கு பிறகு சரியாகி விட்டது.மூன்று மதத்தில் அவர் சென்னைக்கு போய்விட்டார். இது தான் காரணம் என்று எனக்கு இப்பொழுது தான் புரிகிறது.திருமதி ராஜு.
பாவம் அந்த குழந்தை..
ஆனால் குழந்தையின் கன்னத்தை விட முத்தம் தருவதற்கு சிறப்பானது ஏது?
ஆனால் குழந்தையின் கன்னத்தை விட முத்தம் தருவதற்கு சிறப்பானது ஏது? >>>
இலவம் பஞ்சு வெட்கித் தலைகுனியும் அளவிற்கு மிருதுவான பஞ்சு போன்ற உள்ளங்கால்கள்!
உங்களது சுட்டு விரலை மட்டும் எடுத்து அந்தப் பாதங்களில் மென்மையாக வைத்து தடவிப் பாருங்கள், அதன் சுகமே தனி. அந்தக் குறுகுறுப்பில் காலை ஆட்டிப் பார்க்கும் குழந்தையின் செய்கை இனிமை! பின் இரண்டு கால்களையும் ஒரு சேர சேர்த்து அந்த உள்ளங்கால்களில் முத்தம் கொடுங்கள், சொர்க்கத்தின் வாசல் அருகில் வரை சென்று வருவீர்கள்.
ஒவ்வொரு அனுபவத்தின் கடைசியிலும் "சரிதானே" "யோசிப்போமா" "உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா" என்னும் ஃபினிஷிங் பஞ்ச் கொடுத்திருப்பதில் சப் எடிட்டரின் கைவண்ணம் தெரிகிறது.
குழந்தைகளிடம் வயதுக்கு தக..!
நாசூக் செய்தி நல்ல செய்தியே!