வேலு பேசறேன் தாயி ! நாலஞ்சு மாசத்துக்கு முன்ன நடந்த சம்பவம் இது. இப்போ நெனச்சாலும்... கறுப்பு ஒடம்பு சிலுத்துப் போவுது. ஒருநாளு, ''ஒங்களப் பாக்க குடும்பத்தோட சிலர் வந்திருக்காக''னு மேனேஜரு சொல்றாரு. அடிக்கடி இந்த மாதிரி நம்மள வந்து பாக்குறது வழக்கந்தேன். ஷூட்டிங் இல்லாத நேரமா இருந்தா... நானும் அவுகள பாத்து, அவுக சொல்ற நல்லது கெட்டதுகள கேட்டு அனுப்புவேன். ஆனா, அன்னிக்கு எனக்கு கொஞ்சம் நெருக்கடியான வேலை. ''இன்னொரு நாளு பாக்கலாம்னு சொல்லி அனுப்பிடுப்பா''னு சொன்னேன். வெளியே போன மேனேஜரு... செவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பி வந்தாரு. ''அவங்க ஒங்களப் பாக்காம இந்த எடத்த விட்டுப் போறதா இல்லியாம்''னாரு. என்னடா இவ்வளவு விடாப்புடியா நம்ம மேல பாசம் காட்டுறாகளேனு, ஒடனே அவுகள உள்ள வரச்சொல்லிட்டேன். 13 வயசுப் பொண்ணை தூக்கிக்கிட்டு... தாயுந் தகப்பனுமா உள்ள வந்தாக. ''எங்க கொலசாமியே நீங்கதான்யா''னு என்னோட ரெண்டு கையையும் புடிச்சுக்கிட்டு. . .
நிச்சயம் கொடுத்துவைத்த வாழ்வு...... பிறரை சிரிக்கவைப்பதென்பது நிச்சயம் ஆசீர்வதிக்கப்ட்ட வாழ்வு.... அதோடுகூட சிரிப்பு என்பதற்காக எல்லாவற்றையும் செய்யலாம் என்பதை மட்டும் மாற்றவும்....
COMMENT(S): 8
புது திசையில் புத்தொளிர் பாதையில் வடிவேலு நகைச்சுவை கூட்டுமுயற்சி தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்த உதவுகிறது.
நேற்று இரவு கூட உங்க காமெடிதாண்ணே பாத்துட்டு தூங்க போனோம்...சீக்கிரம் அடுத்த ரவுன்டு வாங்கண்ணே....
"நல்ல இனிமையான வார்த்தைங்க இருக்கிறப்ப ஏன் கொடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துறீகனு ரெண்டே வரியில சொல்லிட்டுப் போயிருக்காரு!"- வள்ளுவ வாத்தியாரு எலெக்ஷனுக்கும் முன்னமேத்தேன் சொன்னாரு. ஆனா நீங்க நீங்கதேன் காதுலயே வாங்குல. இனிமேயாச்சும் ஒரு வரி சமாதானமா சொல்லி அனுப்பிச்சி திரும்ப வந்து வேலய ஆரம்பிக்கிறது.
பில்டப்பு ரொம்ப ஓவராஆஆ இருக்கு.
நிச்சயம் கொடுத்துவைத்த வாழ்வு...... பிறரை சிரிக்கவைப்பதென்பது நிச்சயம் ஆசீர்வதிக்கப்ட்ட வாழ்வு.... அதோடுகூட சிரிப்பு என்பதற்காக எல்லாவற்றையும் செய்யலாம் என்பதை மட்டும் மாற்றவும்....
அப்பத்தா திருந்துச்சா!
23ம் புலிகேசி பார்ட் டூ ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!