• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
23 May, 2013
என் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்!
என் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்! காலகாலமாக பெண்களால் பெண்களுக்கு நேரும் பிரச்னைதான் எனக்கும்! என் கணவர், காவல் துறையில் உதவி ஆய்வாளர். நான்கு பெண் களுக்கு தகப்பன். இந்த நிலையில், தன் மூத்த மகளின் வயதுடைய ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துகிறார். வேறொருவரின் மனைவி யான அந்தப் பெண்ணுக்கு ஒரு மகனும் இருக்கிறான். அவ்வப்போது அங்கு சென்று வருவதாக இருந்தவர், சில வருடங்களுக்கு முன் நிரந்தரமாகவே தங்கிவிட்டார். வீட்டுச் செலவுக்குப் பணம் தருவதில்லை. நான்கு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு... படிப்பு, சாப்பாட்டுச் செலவுக்கு என பணமில்லாமல் நான் தவித்த தவிப்பு கொஞ்சநஞ்சமில்ல. என் குடும்பத்துக்கு எதுவும் செய்யாமல்... அடுத்தவர் மனைவிக்கும், அவளுடைய மகனுக்கும் செலவு செய்யும் கணவரைப் பற்றி காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தேன். அவரை அழைத்துப் பேசியதும், 'இனி அப்படிச் செய்ய மாட்டேன்' என்று உறுதி அளித்தார். ஆனால், சில நாட்களிலேயே பழையபடி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 10

கணவனை நல்ல கவனித்திருந்தால் இப்படி நடந்து இருக்குமா?

உஷா சொல்வது சரிதான் எனது கருத்தும். வாழ்க்கையின் பாதையிலேயே உங்கள் பயணம் இருக்கட்டும் பெண்ணே.

இந்த பகுதி எப்பொழுது பழி வாங்கும் பகுதியாக மாறியது. இவரது கணவர் பேருக்குதான் என்பது அவரும், இவரும் அறிந்ததே. இத்தனை நாட்கள் விவாகரத்து புரியாதது ஏன் என்று தெரியவில்லை - அத்துடன் இவர் என்ன நாடுகிறார் என்பதும் தெரியவில்லை. கணவனின் சப்போர்ட் கிடையாது என்பது திண்ணம். அப்படி இருக்கையில் அந்த கணவரை இவர் தாங்குவார் என்பது உறுதியில்லை - அந்த கணவரும் இவரை நாடி வருவார் என்று தோன்றவில்லை.

கணவரின் சர்வீஸ் முடியப்போகிறது! சொத்து கிடையாது! பேங்க் பேலன்ஸ் கிடையாது! வீடு கிடையாது! இருப்பதோ இணைவியின் வீட்டில்! அவரோ காவல்துறை உதவி ஆய்வளர்! நீங்கள் புகார் சொல்லி, பஞ்சாயத்து பண்ணியவர்களோ அவருக்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரிகள்! ஒன்றுமில்லாதவர் மேல் கேஸ் போட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை, மேலும் அவர் சார்ந்த துறையில் மேலும் சில கயவாளித்தனமான காக்கிகள் துணையிருப்பின், உங்கள் பாடு மேலும் சிக்கலாகிவிடும்.

காலம் கடந்து விட்டது! ஒரு வேளை சர்வீஸ் முடிந்தபின், வேறு 'எதுவும்' முடியாதபின் இணைவி துரத்திவிடலாம், இவரும் உங்களை நாடி வரலாம் வயோதிகத் துணைக்காக! அன்று நீங்கள் நளாயினியாக இருப்பீர்களா மாட்டீர்களா என்று வேண்டுமானல் விவாதிக்கலாம்!

இனி அவரால் உங்களுக்கு ஒன்றும் பிரயோசனம் இல்லை. நீங்களே முயற்சி செய்து கடைசி பெண்ணிற்கும் திருமணத்தை முடித்துவிட்டு, மீதி உள்ள காலத்தை நிம்மதியாக கழிக்க வழி பாருங்கள். தப்பித் தவறியும் கூட சாவித்ரி, நளாயினி கதைகளை இனிமேல் படித்து விடாதீர்கள், உங்கள் கடைசி காலமும் கஷ்டமாகிவிடும்.

கணவன் மனைவி, இருவருமே ஒருவர் தலையில் மற்றவர் உட்காரும் முயற்சி செய்ய முயன்றால் கூட, அது, தன் தலையில் தானே மண்ணைப் போடுவதற்கொப்பாகும்!!!வெற்றி தோல்வி என்பது இருவருக்குமே பொதுவானது!!!! யார் தோற்றாலும் அது இருவருமே தோற்றது போலத் தான்..... அனுசரித்துப் போவது என்று கூறுவது சாலச் சிறந்தது, ஏறுவது இறங்குவது என்பது தவறான அணுகுமுறை!!! ரமா மேடம்!!!!

தோழி உங்க கணவர் அவ்வப்போது போகும் போதே நீங்க பத்ரகாளியாக உருவெடுத்திருக்க வேண்டாமா?இந்த மாதிரி துணைவி தேடும் ஆண்களின் பலமே மனைவியின் இந்த பெருந்தன்மைதான்,இனி என்ன செய்யலாம், நீங்க இனி நீங்க தனியாக தண்டிக்கவேண்டாம்,அவராகத்தான் துணைவி என்று தண்டனையை தேடிக்கொண்டாரே அதுவே போதும்,இன்னும் வயதாகி திருந்திவிட்டேன் என்று வருவார்{கண்டிப்பாக இந்த மாதிரி ஆள் எல்லாம் வருவார்கள்}அப்போது விரட்டுங்கள் தாயி.....

வரலக்ஷ்மியம்மா, உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் மகராசி! வாழ்த்துக்கள்.

வரலக்ஷ்மியம்மா, உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் மகராசி! வாழ்த்துக்கள்.

ரமா அவர்கள் எழுதி இருக்கும் ஐடியாவால் இன்னும் ப்ரச்சனை தான் அதிகமாகும். வரலஷ்மி அவர்கள் சொன்னது போல நடந்தால் தான் ஏன் இந்த கோபம் என்று தெரியவரும்.

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 19 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook