• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
20 June, 2013
ரொமான்ஸ் ரகசியங்கள் !
டாக்டர் ஷாலினி

தாய் - சேய் உறவுக்கும், ஆண் - பெண் ரொமான்டிக் உறவுக்கும் இருக்கும் இன்னொரு முக்கியமான ஒற்றுமை: நிபந்தனையற்ற எல்லை இல்லா அன்பு (Unconditional love)!

எந்தத் தாய்க்கும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை என்ன நிறத்தில், உயரத்தில், வடிவில், திறமையோடு பிறக்கும் என்று தெரியாது. எது எப்படியோ... தனக்குப் பிறந்த குழந்தை, தன்னுடையது என்கிற ஒரே காரணத்துக்காக தன் குழந்தையின் மேல் அன்பைக் கொட்டோ கொட்டு என்று கொட்டுவாள். 'நீ இப்படி எல்லாம் இருந்தாதான் நான் உன்னைக் கவனிப்பேன்’, 'நீ இதை எல்லாம் சாதித்தால்தான் உன் மேல் அன்பு காட்டுவேன்’ என்று எந்தத் தாயும் இயற்கையில் சொல்ல மாட்டாள். அதனால்தான் அதை 'நிபந்தனையற்ற அன்பு' என்கிறோம்!

'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே.. இன்றைய கால தாய்மார்கள் குழந்தைகளுக்கு என்னென்னவோ நிபந்தனைகள் விதிக்கிறார்களே? இன்னதுதான் படிக்க வேண்டும், இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும், இந்த வேலைக்குப் போக வேண்டும் என்று ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போடுகிறார்களே..?’ என்கிறீர்களா... அதுவும் உண்மைதான்.

ஆனால், காட்டில் வாழும் விலங்குத் தாய், இப்படி நிபந்தனைகள் விதிப்பதில்லை. அவ்வளவு ஏன், 'நவீன கல்வி' என்கிற விஷயம் உருவாவதற்கு முன்புவரை, எந்த மனிதத் தாயும்... இவ்வளவு நிபந்தனைகள் விதித்ததில்லை. கல்வி மாதிரி ஒரு செயற்கையான திணிப்பை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல், மனிதத் தாயும் தடம் புரள்கிறாளோ என்னவோ?! ஆனாலும்கூட, நிபந்தனைகள் விதிப்பாளே தவிர, தான் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுக்காததற்காக தன் பிள்ளையை தனதில்லை என்று கூறிய அம்மாக்கள் எத்தனை பேர்? 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுதான் இங்கு தாய்மையின் வரலாறு.

சரி, நாம் ரொமான்ஸ் மேட்டருக்கு வருவோம். ஒரு தாயிடம் குழந்தை எதிர்பார்க்கும் அதே துணைநலத்தைதான், வளர்ந்த பிறகு எதிர் பாலினத்திடமும் எதிர்பார்க்கிறது. வாலிப வயதைத் தாண்டிய பிறகு தன்னுடைய அன்புத் தேவைகளை தாய் மட்டும் பூர்த்தி செய்வது, அதற்கு திருப்தி அளிப்பதில்லை. எதிர்பாலினர் ஒருவர் வந்து தாயைப் போன்ற பாசத்தைப் பொழிய வேண்டும், அப்போதுதான் எனக்கு திருப்தி என்றே மனம் ஏங்க ஆரம்பிக்கிறது. பெண் மனம் இன்னும் ஒரு படி மேலே சென்று, அம்மாவின் பாசம், அப்பாவின் பாதுகாப்பு, இரண்டையுமே சேர்ந்து கொடுக்கிறவன் வேண்டும் என்று தேட ஆரம்பிக்கிறது.

இவர்கள் இவ்வளவு ஆசைப்படும் இந்த நிபந்தனையற்ற அன்பு எப்படித்தான் இருக்கும்?!

'நீ எப்படி இருந்தாலும் என் செல்லம்தான். உன் நிறம், உயரம், வடிவம், உடல்வாகு, படிப்பு, சாதனை, லொட்டு லொசுக்கு எதுவுமே முக்கியமில்லை. உன்னை இப்படியே ஏற்றுக்கொள்கிறேன்!’ என்கிற டோட்டல் அக்சப்டன்ஸ் (Total acceptance).

 

'என் கவனம் எல்லாம் உன் மேல்தான். நீ சாப்பிட்டாயா, தூங்கினாயா... என்கிற சின்ன அன்றாட விஷயங்களில் ஆரம்பித்து, நீ சந்தோஷமாக இருக்கிறாயா என்கிற பெரிய விஷயம் வரை, எப்போதும் உன் சுகத்தையே மையப்படுத்தி நான் இருக்கிறேன்!’ என்கிற கமிட்மென்ட் (Commitment).

'நீ என்ன செய்தாலும் நான் ரசிக்கிறேன். இதே விஷயத்தை பக்கத்து வீட்டுக் குழந்தையும் செய்திருக்கும். ஏன்... இந்த உலகில் பிறந்த எல்லா குழந்தைகளுமே செய்திருப்பார்கள். அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. ஆனால், நீ செய்யும் ஒவ்வொரு விஷயமும் எனக்கு ரசனைக்கு உரியதாக இருக்கிறது!’ என்கிற உச்சகட்ட ரசிப்பு (Appreciation).

'இந்த உலகமே உனக்கு எதிராக இருந்தாலும், நீ தோற்றுப் போனாலும்கூட, நான் எப்போதுமே உன்னோடுதான்!’ என்கிற முழு விசுவாசம் (Absolute loyalty).

'என்ன நடந்தாலும் என்னிடம் சொல்லலாம். நான் உன்னை விமர்சிக்காமல் உன்னை உள்ளபடி அப்படியே ஏற்று, எதற்காகவும் என் அன்பை குறைத்துக்கொள்ள மாட்டேன்!’ என்று தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய முழு சுதந்திரம் (Total freedom).

'உனக்கு ஏதாவதுனா, என் அடி வயிறு அப்படியே கலங்கிடும்!’ என்கிற உச்சகட்ட அக்கறை (Concern).

இவை எல்லாம்தான், ஒரு தாய், தன் குழந்தைக்குத் தரும் உணர்வு ரீதியான உத்தரவாதங்கள். இதே உத்தரவாதங்களைத்தான் தங்கள் துணைவர்களிடமும் மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது 14 வயதில் ஏற்படும் இன்ஃபேச்சுவேஷனாக  இருந்தாலும் சரி, எழுபது வயதில் ஏற்படும் முதிர்ந்த காதலாக இருந்தாலும் சரி... இந்த உத்தரவாதங்கள் தென்பட்டால் போதும், அதுவே ஒரு போதை மாதிரி ஆகிவிடும். அந்த உறவில் அப்படியே தொபக்கடீர் என்று விழுந்துவிட்டார்கள் என்றால், அதில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி இந்தப் பாசத்துக்குக் கட்டுப்பட்டிருந்தால்தான்... இந்த ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்நாள் முழுக்க ஒன்றாகவே இருப்பார்கள். இவர்கள் இப்படி ஒற்றுமையாக இருந்தால்தான், அவர்களின் குட்டிகளுக்குப் பூரண பாதுகாப்பு. அதனால் இயற்கை இப்படி எல்லாம் ஆணையும் பெண்ணையும் கட்டிவைக்க பல திருவிளையாடல்களைப் புரிகிறது.

ஆனால், ஒருவருக்கு தன் துணையிடம் இப்படி எல்லாம் நிபந்தனையற்ற அன்பும்... அரவணைப்பும் தரத் தெரியவில்லை என்று வையுங்களேன்.  அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? 'சே, எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி ஒரு வெற்று வாழ்க்கையோ..?’ என்ற அதிருப்தியிலேயே வாழ்வின் சுவையை இழந்துவிடுவார்கள். தன் துணைவரைத் தவிர, வேறு யாராவது வந்து இதே உணர்வு ரீதியான உத்தரவாதங்களை அளித்தால் போச்சு, கொஞ்சமும் யோசிக்காமல் சுய கட்டுப்பாட்டையும், சமூக கட்டுப்பாடுகளையும் மீறி... இன்னொரு காதலில் வீழ்வார்கள். ஏற்கெனவே இருந்த உறவில் பிறந்த பிள்ளைகளையும் புறக்கணித்துவிட்டு, புது காதலன்/காதலியோடு கொஞ்சிக் கொண்டிருப்பதிலேயே தம் நிலை மறந்து போவார்கள்.

இயற்கையின் ஆட்டத்தில் ஏன் இந்த காய் நகர்த்தல்கள்?

- நெருக்கம் வளரும்...

COMMENT(S): 19

many thanks i realaised mam

Atmanasthu kamaaya sarvam priyam bhavathi. No one can escape the truth of this statement.

"இன்னதுதான் படிக்க வேண்டும், இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும், இந்த வேலைக்குப் போக வேண்டும் என்று ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போடுகிறார்களே..?’ என்கிறீர்களா... அதுவும் உண்மைதான்"

இதுதான் இப்போதைய உண்மை..!!

ஆங்கில "லவ்" என்ற சொல்லுக்கு இரு அர்தம் இருக்கலாம் ஆனால் தமிழ் அன்புக்கு ஒரே அர்த்தம்தான். அன்பு என்றாலே எதிர்பார்ப்பில்லாதது என்றே பொருள். அதனால்தான் வள்ளுவர் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், என்று சொன்னார். அன்பு இருந்தால் அதை தடைபோட முடியாது எதற்காகவும். எதிர்பார்ப்புக்கு வேறு சொல் "பாசம்", அல்லது காமம். விருப்பு, வெருப்புகளுக்குட்பட்டது.

நன்றி புவனா மற்றும் புவனேஷ்வர்!

One of the good articles in this section by Dr. Shalini.
---
Bhuvaneshwar

டீஸ்# அதற்குப்பெயர் காமம். காமத்தைத்தான் பூட்டி வைக்க வேண்டும். அன்பை நினைத்தாலும் பூட்டி வைக்க முடியாது. பூட்ட முடிந்தால் அதற்கு பெயர் அன்பல்ல.

If all of us loved one another without expectations, the world would be an ideal world.
But the world as we know is not ideal as of now.
So until the world does become ideal, let's reciprocate the affection consciously.

எனது வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் நினைப்பது இயல்பு தான்.

வருகிற வாழ்க்கை துணை எவ்விதம் அமைய வேண்டும் என கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இந்த வயதில் வெகு இயல்பு தான்.

ஆனால். காதல் என்பதும் அன்பு என்பதும் இதை எல்லாம் தாண்டிய ஒன்று.

commitment எனும் சொல்லை நாம் அளவுக்கு மீறி glorify பண்ணிவிட்டோம்.

ஆரம்ப காலத்தில் அது சுகமாக இருக்கும், அன்புடன் காதலுடன் சேர்ந்து சரியான அணுகுமுறையில் தான் இருக்கும். ஆனால் அதை மட்டுமே பிடித்து கொண்டு விட்டால் தான் பிரச்சினை.

அன்பும் காதலும் இருந்தால் commitment இயல்பாகவே இருக்கும். அதை தனியாக emphasize பண்ணவேண்டிய தேவை இல்லை.

நாட்பட அன்பும் காதலும் தேய தொடங்கும் போது, அதே commitment உயிரற்ற எலும்புக்கூடாகி, கட்டாயமான ஒரு ritual ஆகி விடுகிறது.

commitment வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. (அதை தான் living together பிரசாரகர்கள் சொல்லுகிறார்கள். நான் அவன் இல்லை)

கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் இவர்கள் வேண்டாம் என்பது, அன்பற்ற சூழ்நிலையிலும் கட்டாயம் அந்த உறவில் இருக்க வேண்டும் என்ற நிலைமை வேண்டாம் என்பது தான்.

ஆனால் இவர்கள் பண்ணும் தப்பு, அந்த கமிட்மென்ட்டை பாரமாக்கியது எதுவோ அதை சரி பண்ண முயலாமல் கமிட்மெண்டே வேண்டாம் என்பது தான்.

ஆரம்பத்தில் இருந்த அன்பு later on ஏன் இல்லாமல் போனது என ஆராய்வது இல்லை.

புவனா அவர்களின் கருத்தினை நான் வழிமொழிகிறேன்.

அன்பு ஒருவழிப்பாதை அல்ல.

நிறைய சந்தர்ப்பங்களில், ஒருவர் நிபந்தனை அற்ற அன்பினை தரும் போது துணையாக அமைபவர் ஏதோ அது அவருடைய கடமை போல எண்ணி, taken for granted ஆக எடுத்துக்கொண்டு, பதிலுக்கு பிரதிபலிக்கிறோமா என நினைப்பது கூட இல்லை.

உண்மையில் நிபந்தனை அற்ற அன்பினை சிலரால் மட்டுமே தர இயலும். பிறர், ஒரு அளவுக்கு தருவார்கள். குறைந்த பட்சம் தனது துணையும் இதே போல தன்னை நேசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், தவறே இல்லை.

அது கிடைக்காத போது விரக்தி வரத்தான் செய்யும்.

இங்கு ஆண்கள் பெண்கள் என்று பிரித்து இவர்கள் தான் அதிகம் சுயநலமாக உள்ளார்கள் என முடியாது. இரண்டு பக்கத்திலும் இரண்டு வகையறாக்களும் almost equally உள்ளன.

துணையின் தேவைகளை புரிந்து கொள்ளாமல், மதிக்காமல் இருக்கும் நபர்களே (உதாரணமாக மனைவியை மதிக்காத ஆண், many career oriented women) இவ்வாறு நடந்து கொள்வது.

இப்ப எல்லாம் எங்க பார்த்தாலும் ஓரே தொபக்கடீர் தான் நடக்கிறது....

ஒரு தாய், தன் குழந்தைக்குத் தரும் உணர்வு ரீதியான உத்தரவாதங்கள்..... என்னை பொருத்தவரை சத்தியமான உண்மை,இந்த உணர்வு எல்லா தாய்க்கும் கண்டிப்பாக இருக்கும்....

மனைவிகளுக்கு 'தாயாய்' இருக்கும் கணவர்களும் உண்டு. --
ஆம்,ராதா ரங்கராஜு, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. அது கடவுள் தரும் வரம். முற்பிறவி புண்ணியம்.
டெய்சி சொன்னது போல்
--பெண் மனம் இன்னும் ஒரு படி மேலே சென்று,அம்மாவின் பாசம், அப்பாவின் பாதுகாப்பு, இரண்டையுமே சேர்ந்து கொடுக்கிறவன் வேண்டும் என்று தேட ஆரம்பிக்கிறது.
--
அப்படி ஓர் தாயுமானவன் க்ணவனாக கிடைக்கும்போது பதிலுக்கு நாமும் நிபந்தனையற்ற அன்பை தருகிறோமா என்று நம்மை நாமே பரிசீலிப்பதும் வேண்டும். அன்பு ஒரு வழிப் பாதையல்ல.

போர்

தாய்மை என்பது ஒரு 'மனநிலை' அது பெண்ணுக்குரியது மட்டுமல்ல...
மனைவிகளுக்கு 'தாயாய்' இருக்கும் கணவர்களும் உண்டு.

'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு'......மாற்றம் ஒன்றே நிலையானது என்கிற உலகில் தாய்மையின் இந்த பரிமாணமும் மாற்றத்திற்கு உட்பட்டதோ?

நிபந்தனையற்ற அன்பு=ஏற்பு மையம் ரசனை விசுவாசம் சுதந்திரம் கரிசனை இப்படித் தொடர்ந்தால், உன் மூச்சில் நான் வாழும் முதுமையும் ஆனந்தமே

மறு பக்கத்தை பற்றியும் பேசுங்க ஷாலினி!எத்தனை பெண்கள் தான் மட்டும் மானுடப் பிறவி என எண்ணி வாழுகிறார்கள்.

பெண் மனம் இன்னும் ஒரு படி மேலே சென்று, அம்மாவின் பாசம், அப்பாவின் பாதுகாப்பு, இரண்டையுமே சேர்ந்து கொடுக்கிறவன் வேண்டும் என்று தேட ஆரம்பிக்கிறது

Displaying 1 - 17 of 17
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 17 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook