களத்தில் விகடன் - தானே துயர் துடைத்தோம் ! நொச்சிக்காடு... சமீபத்திய 'தானே' புயல் தாக்குதலால் நொறுங்கிக் கிடக்கும் கடலூர் மாவட்ட கிராமங்களில் ஒன்று. கடலோரத்தில் வசிப்பவர்கள், மீன்பிடித் தொழில் செய்கிறார்கள். மற்றவர்கள், தினக் கூலிகள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என வைத்திருப்பவர்கள்... சவுக்கு போட்டு, வெட்டி விற்பனை செய்வதைத் தவிர, வேறு விவசாயம் எதுவும் செய்ய முடியாத நிலை. கடந்த 2004-ம் ஆண்டு, சுனாமி தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஊர்களில் இதுவும் ஒன்று. 'பட்ட காலிலேயே படும்’ என்பது போல... இப்போது 'தானே’ தாக்குதல். நம்முடைய 'தானே’ துயர் துடைப்பு அணி இந்தக் கிராமத்தை வலம் வந்தபோது, ''ஆம்பளைங்க எங்கயாவது கூலி வேலைக்குப் போறாங்க. மாசம் முழுக்க வேலைக்குப் போனாலும் மூவாயிரம்கூட முழுசா பார்க்க முடியாது. இதை வெச்சுக்கிட்டு எங்களால எப்படி வாழ முடியும்? பெண்களும் உழைக்கத் தயாரா இருக்கோம். ஆனா, என்ன தொழில் பண்றதுனுதான் தெரியல''. . .
COMMENT(S): 1
நீங்க ரொம்ப நாளைக்கு நல்லலா இருக்கனும்