• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
கட்டாயம் தேவை... கல்யாண கவுன்சிலிங் !
கட்டாயம் தேவை... கல்யாண கவுன்சிலிங் ! வாழ்க்கையின் மிக ஆனந்தமயமான தருணங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் முக்கியமானது... நிச்சய தார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலம் மற்றும் திருமணமான முதல் ஆறேழு மாத காலங்கள்! பூரிப்பு, உற்சாகம், மயக்கம், கவர்ச்சி என இனம்புரியாத கிறக்கங்களுடன் அத்தனை மிருதுவாக வாழ்க்கை மாறி நிற்கும் பருவமிது. 'திருமண பந்தத்தினுள் நுழையும் ஆணும் பெண்ணும் இந்த காலகட்டத்தில்தான் பரஸ்பரம் மிக பக்குவமாகவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும்' என்கிறது மருத்துவ உலகம். ஆனால், நண்பர்களின் வாழ்த்தொலிகள், மேளதாள சப்தங்களுக்கு இடையில் மருத்துவர்களின் இந்த எச்சரிக்கை மணி அமிழ்ந்து போவதுதான் வருத்தமே! 'இரவினில் திருமணம், விடிந்தால் விவாகரத்து' என்று போய்க் கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளில்கூட 'ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்’ என்றொரு கான்செப்ட் இருக்கிறது, ஸ்பெஷலிஸ்ட்டு களும் இருக்கிறார்கள். அதாவது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தம்பதி, திருமணத்துக்கு முன் இந்த ஆலோசகர்களை சந்தித்து, 'நாங்கள் பொருத்தமான ஜோடிதானா.... . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

பாலுவின் கருத்து அருமை. காதல் திருமணமோ, நிச்சயம் செய்யப்பட்டதோ , எதுவா இருந்தாலும் நல்ல புரிஞ்சிகிட்டு திருமண வாழ்வில் நுழையணும்.

திருமணத்துக்கு முன்பு முன் பின் தெரியாத ஒரு மனநலமருத்துவரிடம் தனது குணநலன்களை எழுத்தில் தெரிவிப்பது கூட ஆபத்தாய் முடியலாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்பதே சாலச் சிறந்தது. மேலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து (ஒருவர் கோபமாய் இரூக்கும் போது மற்றவர் விட்டுக் கொடுப்பது) செல்வது வாழ்க்கையாய் இனிமையாக்கும். கணவன் - மனைவி உறவு பிரச்சனைகள் வெளியே தெரிந்தால் அடுத்தவர்கள் அதை எளிதாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வழி வகுக்கும். எனவே அந்தரங்கத்தை அந்த ரங்கனுக்கே வெளிச்சமாக வைப்பது நல்லது.

லட்சுமணின் விஷயத்தை அடியோடு மறுக்கிறேன். அரேஞ்டு மேரெஜில் மண்டபம் கிடைக்காததால் மூன்று மாதங்களுக்கு அப்புறம் மணம் செய்ய நேரிட்டாலும் தினம் கூடச் சுற்ற மறந்ததில்லை. அந்த நேரங்களில் பல நேரங்களில் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் இயல்பு பழக்க வழக்கங்கள் சில வெளி வந்து விடும். அவை தெரிந்து பல புரிந்து அப்புறம் பரவாயில்லை இவளுடன் நானும், என்னுடன் அவளும் இருந்து வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையை அந்தக்காலம் விதைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. மனது சுத்தமாக வாழ்க்கையில் துணையின் அர்த்தங்களை உணர்ந்திருந்தால் உடல் உறவு கொண்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அப்படி உணர்ந்தவர்கள் உடல் உறவுக்கு பறப்பதில்லை. ஏனென்றால் கிணற்றுத்தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும் என்ற பழமொழியினை நன்கு அறிந்திருந்ததால்தான். காத்திருப்பதிலும் சில சுகம் இருக்கத்தான் இருக்கிறது.அது மட்டுமல்லாது கண்டதும் காதல் கொள்ளாமல், பல திரைப்படங்கள் போல கொஞ்சம் காதலர்கள் போல துள்ளீத்திரியும் சின்ன வசந்தத்தையும் அந்த இடைவெளி அனுமத்தித்தது என்பது இதில் விசேடம். பையன் அத்து மீறுகிறான் என்பதையோ, இல்லை வேறொரு பெண்ணோடு சுற்றியவன் இப்போது நம் பெண்ணோடு சுற்றுகிறானோ என்று தெரிந்தவர் எச்சரிக்கை செய்யவும், அதே வைஸ் வர்ஸாகவும் இருக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது. அப்படி நிச்சயத்துக்கு பிறகு முறிந்தாலும் பெரும் பணச்சேதமும், மனச்சேதாரமும் இல்லாமல் இருக்கும் இன்ஷ்யூரன்ஸாகவும் இந்த இடைக்காலம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெரியவர்கள் கண்காணிப்பிலே இருக்கும்வரையில், இரு மனங்கள் நல்ல மனமுதிர்வுடன் திருமணத்தை அணுகும் வாய்ப்பு இருக்கையில் இவரின் சொற்களில் அர்த்தமேயில்லை.புரோகிரியேஷனான உடல் உறவுக்கு அப்புறம் இரு மனங்களின் ஆழ்ந்த புரிதல்தான் தினசரி இல்லற இரகசியம். அது மட்டும் வந்து விட்டால் அப்புறம் வாழ்வில் கவர்ச்சி, ரொமான்ஸ், சண்டை, சச்சரவு, அமைதி, வெள்ளைக்கொடி, சமாதானப்புறா, சரண்டர் எல்லாம் மிக அழகாக அமைந்து விடும். இலக்குமணன் ஒரு ஷார்ட்ரேஞ்ச் பார்வையில் சொல்லியிருக்கிறாரே தவிர அனுபவசாலியாகத்தெரியவில்லை.

Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 14 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook