அனாதைகள் என்று யாருமில்லை ! ''ஐம்பது வயசாச்சு. இன்னும் ஓடிட்டே இருக்கேன். கடவுள், இதே உடல்பலத்தைக் கொடுத்தா போதும்... அனாதரவா கிடக்கற சடலங்களை அடக்கம் செய்ற என் பணி தொடர்ந்துட்டே இருக்கும்!'' - சென்னை, தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் 'உத்ரா உதவும் சேவை மையம்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நீலாவின் வார்த்தைகளில் அத்தனைக் கனிவு! சிணுங்கிக் கொண்டே இருக்கும் மொபைல் போனை, சைலன்ட் மோடில் போட்டுவிட்டுப் பேச்சைத் தொடர்ந்த நீலா, ''சொந்த ஊர் திருச்சி. சின்ன வயசுலயே உதவும் மனப்பான்மை அதிகம். திருச்சி, ஹோலி கிராஸ் பள்ளிக்கூடத்துல படிக்கறப்பவே ஒரு டீமை உருவாக்கி... முதியோர், ஊனமுற்றோர், அனாதரவானவர்கள்னு முடிஞ்ச உதவிகளைச் செய்துட்டு இருந்தவ நான். அதனால, பொதுச்சேவைங்கறது ரத்தத்துல ஊறிப்போச்சு. பி.யு.சி., படிக்கும்போதே திருமணம் முடிய, சென்னையில் வாழ்க்கை ஆரம்பமாச்சு. கணவர் பிஸினஸ்மேன். அவர் துணையோட தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, பாதிக்கப்பட்டவங்கனு பலருக்கும் உதவிகளை செய்ய ஆரம்பிச்சேன். இருந்தாலும், சேவையில் முழுமையா ஈடுபடுத்திக்காத குறை. . .
எவ்ளோ பேருக்கு வரும் இந்த சேவை உள்ளம் வாழ்த்துக்கள் அம்மா. பத்துபிள்ளைகள ஒரு தாய் ஆயிரம் பாடுபட்டு ஆளாக்கிடுவா ஆனால் எவ்ளோ பிள்ளைகள் தன் தாய் தந்தையருக்கு செய்யிராக , பல வெளீனாடுகளீல்வாழும் சத் புத்திரர்கள் பலர் தன்னை பெத்தவங்க சாவுக்கு வரதில்லே. அப்படி பட்ட இந்த காலத்துலே இந்தம்மா சிம்ப்லிகிரேட் தலை வணங்கரேன்
COMMENT(S): 7
nalla ullam. neenda ayula vazhanga andavanai vendukiren
Really Great Lady Nila..I salute her work.
வாழ்த்துக்கள் நீலா.
எவ்ளோ பேருக்கு வரும் இந்த சேவை உள்ளம் வாழ்த்துக்கள் அம்மா. பத்துபிள்ளைகள ஒரு தாய் ஆயிரம் பாடுபட்டு ஆளாக்கிடுவா ஆனால் எவ்ளோ பிள்ளைகள் தன் தாய் தந்தையருக்கு செய்யிராக , பல வெளீனாடுகளீல்வாழும் சத் புத்திரர்கள் பலர் தன்னை பெத்தவங்க சாவுக்கு வரதில்லே. அப்படி பட்ட இந்த காலத்துலே இந்தம்மா சிம்ப்லிகிரேட் தலை வணங்கரேன்
இவரை விட்டு அவள் விகடனில்,ஒரு தன்னம்பிக்கை தொடர் எழுத சொல்லுங்கள்,அதிக பெண்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும்....
God Bless you
வளர்க தங்களின் தொண்டு. 'உத்ரா' எப்படி பண உதவி செய்வது? விவரம் தேவை.