'நாங்க கலக்குறோமே மம்மீ...' தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைவிட, இடையிடையே வரும் விளம்பரங்கள்தான் எப்போதுமே ஹிட்! குறிப்பாக, நம் வீட்டு க்யூட் செல்லங்களை அப்படியே கட்டிப் போட்டுவிடும். சில நொடிகளே திரையில் வந்தாலும், முதல் தடவையிலேயே... 'பிக்கல பிக்கல பிங்க் பிங்க்...' என்று மனதுக்குள் பதிவாகிவிடும் அத்தகைய விளம்பரங்களின், 'மேக்கிங் மேஜிக்’ பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன், இயக்குநர் மணிகண்டனை சந்தித்தோம். ''ஜிஆர்டி வின்டேஜ் ஜுவல்லரி, கோல்ட் வின்னர் ஆயில், வோடபோன், யுனிவர்சல் போன், மெடிமிக்ஸ், கஜானா ஜுவல்லரி என்று நிறைய விளம்பரப் படங்களை இயக்கியிருக்கிறேன்! இயக்கியிருக்கிறேன் என்று சொல்வது தவறு... இயக்கி இருக்கிறோம். காரணம், விளம்பரத் தயாரிப்பு என்பது ஒரு டீம் வொர்க்'' என்று தன்னடக்கத்துடன் ஆரம்பித்தார் 100 விளம்பரப் படங்களுக்கு மேல் வெற்றிகரமாகவும் ரம்மியமாகவும் இயக்கியிருக்கும் மணிகண்டன். ''டி.வி-யில் 10 - 30 நொடிகளுக்குள் காட்டப்படுகிற விளம்பரத்தை முழுமையாகத் தயாரிக்க 30 நாட்களுக்கும் மேல் தேவைப்படும் என்று சொன்னால், வியப்பாக இருக்கும்.. . .
COMMENT(S):