உன்னால் முடியும் பெண்ணே ! பிஸினஸ் வெற்றிக் கதைகள் கட்டுப்பாடுகளையும், கஷ்டங்களையும் தாண்டி முன்னேறும் பெண்கள்தான் வெற்றியை அடைகிறார்கள். அப்படி ஓர் வெற்றிப் பெண்தான், கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஜீவரத்தினம். கையில் இரண்டு குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, சிறுவயதிலேயே கணவர் காலமாகிவிட, தன் உழைப்பால் இன்று தானும் கரையேறி... கூடவே சில பெண்களையும் கரையேற்றிஇருக்கும் ஜீவரத்தினத்தின் பிடிமானம், அவல், பொரிகடலை தயாரிப்புத் தொழில்! ''ரெண்டு புள்ளைகள கையில வெச்சுக்கிட்டு, மாசம் 500 ரூபாய்க்குள்ள குடும்பம் நடத்த கஷ்டப்பட்ட நான், இன்னிக்கு இந்தத் தொழிலோட அத்தனை நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு மாசம் 7,500 ரூபாய் சம்பாதிக்கிறேன். வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டதுதான் வெற்றிக்குக் காரணம்!'' என்று எளிமையாக ஆரம்பிக்கிறார் ஜீவரத்தினம். ''லாரி டிரைவரா வேலை பார்த்த வீட்டுக்காரர், கல்யாணமாகி பத்து வருஷத்துல உடம்பு சரியில்லாம திடீர்னு இறந்துட்டார். அதுவரை வெளியுலகம் தெரியாமலே இருந்துட்ட நான், என்னோட ரெண்டு ஆம்பளப் புள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கணுமேங்கிற வைராக்கியத்துல, மில். . .
COMMENT(S): 4
தமிழர்களயே பிடிக்காத சோனியா காந்தி பெயர் எதுக்கு வைக்கனும்?
மனைவி செத்தா மருமணம் கணவன் செத்தால் மனைவி எப்படியாசும் உழச்சு பிள்ளைங்களை வளத்துடரா , ஜீவரத்தினம் நீங்க கிரேட்
Women of Strength ! Hats off !
உன்னால் முடியும் பெண்ணே ! உண்மையிலேயே இந்த தலைப்புக்கு மிகவும் பொருத்தமானவர்,வாழ்த்துக்கள் ஜீவரத்தினம்.....