இனித்தது...இயற்கை ஞாயிறு ! கான்கிரீட் காடாகிவிட்ட சென்னையில், இயற்கையின் அருளை, அற்புதத்தை புரியவைக்க புலர்ந்தது அந்நாள். அது, சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள செயல்பாட்டாளர்கள் இணைந்திருக்கும் 'பூவுலகின் நண்பர்கள்’ தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைத்த 'ஐந்திணை சுற்றுச்சூழல் விழா!’ லயோலா கல்லூரியில் அந்த ஞாயிறு காலை, எளிமையான சணல் துணியால் செய்யப்பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடு ரசிக்க வைத்தது. அரங்கில் உட்காரவே இடம் இல்லாத அளவுக்குக் கூட்டம். 'சுற்றுச்சூழலுக்காக, ஒரு ஞாயிற்றுக்கிழமையை செலவழிக்கத் தயாராக இருப்பவர்கள் சென்னையில் இத்தனை பேரா..?!’ என்று மனதுக்கு உற்சாகமாக இருந்தது. காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி, ஒளிப்படக் காட்சி, நாடகங்கள் என்று கண்களுக்கு விருந்து கிடைக்க, படப் புத்தகத்தைப் புரட்டிய குழந்தைகளின் பரவசம்... அனைவருக்கும்! ஆச்சார்யா வினோபா பாவே அவர்களின் 'பூமிதான இயக்க'த்தில், அவருடன் சேர்ந்து பணியாற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் பேச்சும், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரின் உரையும்... 'மனித இனம் வளர்ச்சி என்கிற பெயரில் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறது!’ என்கிற கசப்பான. . .
இந்த மாதிரி கூட்டம் போடுவதால் மட்டும் விழிப்புணர்வு வந்துவிடும் என்று நினைப்பவர்கட்கு, ஒரு வேண்டுகோள். உங்கள் வீட்டுக் குப்பைகளை உணவுக்கழிவுகள், ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் குப்பிகள், கண்ணாடிக் குப்பிகள், ஸ்டைரஃபோம் தட்டுகள், கப்புகள் என்று தனித்தனியே சேர்த்து வாரம் ஒருமுறை அவைகளை அந்த அந்த ரீசைக்கிள் செய்யும் இடத்திற்கு கொண்டு சென்றாலே 25% சுற்றுச்சூழலை நாம் பாது காத்த மனத்திருப்தி கிடைக்கும். நாம் மற்றவர்கட்கு உபதேசம் செய்வதில் கில்லாடிகள், அதுவும் கூட்டம் போட்டுக்கொண்டு, விளம்பரம் செய்துகொண்டு. இன்னும் நாம் இந்த அடிப்படை காரியங்களைச் செய்ய தயங்குகிறோம். அல்லது செய்ய மனம் வருவதில்லை. ஆ! மறந்தேனே. பாட்டரிகளையும், எல்க்ட்ரானிக் பொருட்களையும் தனியே பிரித்துக்கொள்ளுங்கள்.
COMMENT(S): 3
இது போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து நகரங்களிலும் நடத்துவதன் மூலம் இயற்கையைப் போற்றுவோம்.
இந்த மாதிரி கூட்டம் போடுவதால் மட்டும் விழிப்புணர்வு வந்துவிடும் என்று நினைப்பவர்கட்கு, ஒரு வேண்டுகோள். உங்கள் வீட்டுக் குப்பைகளை உணவுக்கழிவுகள், ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் குப்பிகள், கண்ணாடிக் குப்பிகள், ஸ்டைரஃபோம் தட்டுகள், கப்புகள் என்று தனித்தனியே சேர்த்து வாரம் ஒருமுறை அவைகளை அந்த அந்த ரீசைக்கிள் செய்யும் இடத்திற்கு கொண்டு சென்றாலே 25% சுற்றுச்சூழலை நாம் பாது காத்த மனத்திருப்தி கிடைக்கும். நாம் மற்றவர்கட்கு உபதேசம் செய்வதில் கில்லாடிகள், அதுவும் கூட்டம் போட்டுக்கொண்டு, விளம்பரம் செய்துகொண்டு. இன்னும் நாம் இந்த அடிப்படை காரியங்களைச் செய்ய தயங்குகிறோம். அல்லது செய்ய மனம் வருவதில்லை. ஆ! மறந்தேனே. பாட்டரிகளையும், எல்க்ட்ரானிக் பொருட்களையும் தனியே பிரித்துக்கொள்ளுங்கள்.
படிக்கும் போதே இனித்தது,நல்ல கட்டுரை,சிறந்த செய்தி.....