சாம்பியன் சம்யுக்தா ! ''என் வெற்றிகள் எனக்குத் தர்ற சந்தோஷங்களைவிட, எங்கம்மாவுக்குத் தர்ற சந்தோஷங்களும் பெருமைகளும் அதிகம். அதுதான் என்னை அடுத்த வெற்றியை நோக்கி நகர வைக்குது!'' - தெளிவாகப் பேசுகிறார் சம்யுக்தா... ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் சாம்பியன். சென்னை, லயோலா பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி. ''சம்யுக்தாவோட அப்பா, அவளுக்கு மூணு வயசு இருக்கும்போதே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு. அவங்க அப்பா இருந்தா எப்படி எல்லாம் பார்த்துப்பாரோ, அதுல எந்தக் குறையும் இல்லாம வளர்க்கணும்னு நினைச்சேன். அதனாலதான் அவளுக்கு விருப்பமான ஸ்போர்ட்ஸ்ல உற்சாகப்படுத்தினேன். இப்போ ஸ்கேட்டிங்ல நேஷனல் சாம்பியனா முன்னேறியிருக் கிறது, ரொம்ப மகிழ்ச்சியா, நெகிழ்ச்சியா இருக்கு. இன்னும் நிறைய சாதனைகளை அவ படைக்கணும்!'' - சம்யுக்தாவின் அம்மா நிர்மலா, கண்கள் ததும்பி நிறுத்த, தொடர்ந்தார் சம்யுக்தா... ''எனக்கு ஆறு வயசு இருக்கும்போது, என் மாமாதான் எனக்கு ஸ்கேட்டிங்கை அறிமுகப்படுத்தினார். கிளாஸ்ல சேர்ந்தப்போ, பிராக்டீஸ் ரொம்ப கஷ்டமாதான். . .
COMMENT(S): 4
அம்மாவின் ஆசை நிறைவேற்றி வைத்த சம்யுக்தாவுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் சம்யுக்தா
கண்டிப்பாக உங்க அம்மாவை இன்னும் பெருமைப்பட வைப்பாய்!!
தேசிய போட்டியில் சாம்பியன் ஆக, வாழ்த்துக்கள் சம்யுக்தா!!
வாழ்த்துக்கள் சம்யுக்தா!