என் 10 - பராக் ஒபாமா பராக் ஒபாமாவின் தந்தை சீனியர் ஒபாமா, கென்யா நாட்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்துக்குப் பட்டப்படிப்புக்காக வந்த மாணவர். அங்கே ஆன் டன்ஹாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஹவாயின் ஹோனோலுலுவில் இவர்கள் இருவருக்கும் 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார் பராக் ஒபாமா. கென்யாவின் 'ஸ்வாஹிலி' மொழியில் 'பராக்’ என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று பொருள். திருமணமான மூன்றே வருடங்களில் பெற்றோர் பிரிந்தனர். அதற்குப் பிறகு அம்மாவுடன் இந்தோனேஷியா சென்றார். அங்குதான் ஒபாமாவின் குழந்தைப் பருவம் கழிந்தது. அமெரிக்காவில் தனது பள்ளிப் பருவத்தின்போது தாத்தா, பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது. பள்ளியில் படிப்பிலும், கூடைப்பந்து ஆட்டத்திலும் சிறந்து விளங்கினார். கருப்பினத்தவர் என்று கூறி, வகுப்பில் சக மாணவர்கள் இவரை இழிவாக நடத்தினர். கூடைப்பந்துப் போட்டிகளின்போது துன்புறுத்தப்பட்டார். அப்போது, கண்ணாடி முன் சட்டையைக் கழட்டிவிட்டு தன்னைத்தானே உற்றுப்பார்த்து... 'ஏன் இந்த வேறுபாடு?’ என அழுது இருக்கிறார். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே. . .
COMMENT(S):