ஸ்கூல் ஸ்டார் ! வாலிபால் விளையாட்டில் தேசிய அளவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து இருக்கிறார், திருவண்ணாமலை SRGDS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சுகுணன். ''நான் 5-ஆம் வகுப்புப் படிக்கும்போது பள்ளியில் நடந்த விளையாட்டுக்கான திறனாய்வுப் போட்டியில் கலந்துக்கிட்டேன். அதில் மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து எந்த விளையாட்டில் தகுதி உடையவர்னு தேர்வு செய்வாங்க. என்னை அத்லெடிக்ல செலெக்ட் செய்தாங்க. என் அண்ணன் சூரஜ், ஸ்டேட் லெவல் கபடி பிளேயர். 'உனக்கு வாலிபால்தான் செட் ஆகும்’னு என் அண்ணன் சொன்னான். எங்க வாலிபால் ஸ்பெஷல் கோச் ஜவஹலால் சார்கிட்ட சேர்ந்தேன். முதலில் மாநில அளவில் செலக்ட் ஆனேன். ஜவஹர்லால் சார் என்னை மாவட்ட கோச் முனுசாமி சாரிடம் அறிமுகப்படுத்தினார். இந்த வருடம் தேசிய அளவில் 17 வயதுக்கு உட்பட்டோர் வாலிபால் போட்டியில் வெற்றிபெற்று தேசிய வீரர் ஆனது சந்தோஷமாக இருக்கு'' என்கிறார் சுகுணன். பள்ளி முதல்வர் ஜகதீஸ்வரி ''சுகுணனோட அப்பா. . .
COMMENT(S):