கொல கொலயா முந்திரிக்கா ! கிராமங்களில் இன்றும் விளையாடப்படும் 'கொல கொலயா முந்திரிக்கா’ விளையாட்டை கோ கோ விளையாட்டின் தாய் என்று சொல்லலாம். 10, 20, 30 என ஊரில் இருக்கும் எல்லாச் சுட்டிகளும் விளையாடும் ஒரே விளையாட்டு இது. மற்ற விளையாட்டுகளைப் போல் விளையாடுவதற்கு அணி பிரிப்பது கிடையாது. ஒருவர் சுற்றி வர, மற்றவர்கள் எதிர் அணியாக இருப்பார்கள். அப்படி முதலில் சுற்றி வருபவரைத் தேர்ந்தெடுப்பதே ஓர் அழகு. எல்லோரும் இரண்டு கைகளையும் சற்று மேலே தூக்கி உதறுவதுபோல உதறியபடி 'சுண்டெலி நண்டெலி... ஒன்று-இரண்டு-மூன்று... சேர்ந்து விளையாடு பப்படி சொப்படி எப்படி?’ எனச் சொல்லியவாறு தங்களுடைய ஒரு கையை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மற்றவர்கள் கைகள் மீது அடுக்குவார்கள். அதில் சிலர் உள்ளங்கையை விரித்தும், சிலர் புறங்கை தெரியும்படியும் வைப்பார்கள். இதில் உள்ளங்கை தெரிய இருப்பவர்கள் எத்தனை பேர்... புறங்கை தெரிய வைத்தவர்கள் எத்தனை பேர்... எனக் கூட்டத்தில் எண்ணுவார்கள். எந்தப் பக்கம். . .
COMMENT(S):