தனித்துவம் காட்டுங்கள்... வெற்றியாளர் ஆகுங்கள் ! டியர் ஃப்ரெண்ட்ஸ்... 'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சியில் எங்களின் முதல் அசைன்மென்ட், பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான பர்வீன் சுல்தானா பேட்டி. அழகுத் தமிழில் ஆளுமைத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் முதல் அனுபவமே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் கேட்ட கூர்மையான கேள்விகளுக்கு அவர் அளித்தத் தெளிவான பதில்கள்... ''நீங்கள் முதன்முதலில் ஏறிய மேடை எது? இதுவரை எத்தனை மேடைகளில் பேசி இருக்கிறீர்கள்?'' ''நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பாரதி பாசறை சார்பாக சென்னை - ராயபுரத்தில் நடந்த 'பாரதியார் தேசத்துக்காகப் பாடினாரா? சமூகத்துக்காகப் பாடினாரா?’ என்ற பட்டிமன்றத்தில் 'சமூகத்துக்காகப் பாடினார்’ என்ற தலைப்பில் அணித் தலைமையில் பேசினேன். இதுவரை ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி இருக்கிறேன்.'' ''முதல் பேச்சுப் போட்டி அனுபவத்தைச் சொல்லுங்களேன்'' ''எனக்கு மிகவும் பயமாக இருந்தது. கை, கால்கள் நடுங்கின.. . .
இலட்சுமணன் கோடு போட்டதாகக் கம்பனோ வால்மீகியோ குறிப்பிடவே இல்லை.
கோடு போட்டதற்கு ஆதாரமான கம்பராமாயணப் பாடலை அம்மையார் எடுத்துக் காட்டினால் நலமாக இருக்கும்.
பெஞ்சமின் லெபோ, பாரிசில் இருந்து.
COMMENT(S): 1
இலட்சுமணன் கோடு போட்டதாகக் கம்பனோ வால்மீகியோ குறிப்பிடவே இல்லை.
கோடு போட்டதற்கு ஆதாரமான கம்பராமாயணப் பாடலை அம்மையார் எடுத்துக் காட்டினால் நலமாக இருக்கும்.
பெஞ்சமின் லெபோ, பாரிசில் இருந்து.