அவதார் - வாள் ஏந்திய சுட்டி வீரர்கள் ! 'தூக்குமேடை எனக்குப் பஞ்சு மெத்தை’ எனக் கொக்கரித்து, மரணக் கயிற்றை முத்தமிட்டவர்... வெள்ளையரின் பீரங்கிப் படையைத் தன் நெஞ்சுரத்தால் எதிர்த்தவர், வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் இன்று நேரில் வந்தால்... தூத்துக்குடி, கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்.டி.ஆர். பள்ளியில் வழக்கம்போல் சீருடை அணிந்துவந்த சிறார்களுக்கு இடையே சில சின்னப் பிஞ்சுகள், கையில் வாளுடன் ராஜா வேஷத்தில் வந்து இறங்கியதைக் கண்டதும், பள்ளி வாட்ச்மேன்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து, ''என்னலே இது... கையில வாலோடு வந்திருக்கே?'' என்று கேட்க, ''இது வாலு இல்லே வாட்ச்மேன், கத்தி. வாலு பின்னால இருக்கும் தெரியுமா'' என்று கலாய்த்துச் சிரித்தனர். ஓர் அறையில் குட்டிக் குட்டி மாணவர்களை வீரபாண்டிய கட்டபொம்மன்களாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்கள் டீச்சர்கள். முதலில் மேக்-அப். அடுத்து, இடுப்பில் பஞ்சகச்ச வேட்டியுடன் சிவப்புப் துண்டு. தோளில் இருந்து இடுப்பு வரை குறுக்காக அணியப்பட்ட ஜரிகைப் பட்டி, மார்பில். . .
COMMENT(S):