பாட்டில் தோட்டம் ! மின்வெட்டு... பாடம் படிக்க முடியலை; டிவியில் பிடிச்ச ப்ரோக்ராம் பார்க்க முடியலை-னு நமக்கும் தலையாயப் பிரச்னையா இருக்கு. இதற்கு சூரிய ஆற்றல் மூலம் தீர்வு காண்பதுடன், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் நம் வீட்டிலேயே காய்கறிகளை விளைவிக்க முடியும் என்று சொல்லி, அவற்றுக்கு 'டெமோ’வும் காட்டுகிறார்கள் விக்னேஷ் பாண்டியன் மற்றும் திருச்செந்தூரன். தங்களது 'தி திங்க் சென்டர்' மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வரும் இவர்கள் ''மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க, தீராத ஆற்றலான சூரிய ஒளிதான் ஒரே தீர்வு. சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் வகையிலான அமைப்பை நம் வீடுகளில் பொருத்திப் பயன் பெறலாம். ஒட்டு மொத்தமாகக் குண்டு பல்புகளுக்கு குட் பை சொல்லிவிட்டு, சி.ஃஎப்.எல் பல்புகள் பொருத்தி மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்'' என்றனர். தாங்கள் உருவாக்கிய சோலார் எனர்ஜி கிட்ஸ்-ஐ வெயிலில் கொண்டுவந்து மாணவர்களுக்கு விளக்கினார்கள். ''இந்த சோலார் தட்டின் மீது சூரிய ஒளி படும்போது. . .
COMMENT(S):