சுட்டி ஸ்டார்விண்கல் பள்ளம்! கீரின்லாந்து நாட்டில் மனிட்சாக் நகருக்கு அருகே மிகப் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதன் நீளம் சுமார் 100 கி.மீ. இது 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய மிகப் பெரிய விண்கல் ஏற்படுத்திய பள்ளமாம். இதுவரை உலகில் நிகழ்ந்த விண்கல் தாக்குதல்களில் இதுவே பழமையானது என டென்மார்க் புவி ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த விண்கல் மோதலால் அப்போது இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் பேரிழப்பு ஏற்பட்டு இருக்கும். அத்துடன் பூமியின் மேல் பரப்பு 25 கி.மீ உயரம் தாழ்ந்துபோய் இருக்கும். இதனால் ஏற்பட்ட அதிர்வலைகளும் வெப்பமும் பூமியின் ஆழ்ப் பகுதிவரை தாக்கி இருக்குமாம். டிஸ்கவரியும் இன்வென்ஷனும்! டிஸ்கவரிக்கும் இன்வென்ஷனுக்கும் என்ன வித்தியாசம்? ஏற்கனவே இருக்கிற பொருளை அறிந்து பயன்படுத்துவது டிஸ்கவரி. உதாரணமாக மரம் என்பது ஏற்கனவே உள்ள பொருள். அதை முதன்முதலில் பார்த்து பயன்படுத்தியதை டிஸ்கவரி என்று சொல்ல வேண்டும். ஆய்வு நிகழ்த்தி புதிதாக. . .
COMMENT(S):