வெண்மை பித்தகர் ! இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட வர்கீஸ் குரியன், கடந்த ஒன்பதாம் தேதி மண்ணுலகைவிட்டுப் பிரிந்தார். அவருக்கு வயது தொண்ணூறு. கேரளத்தின் கோழிக்கோட்டில் பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் படித்தார். பிறகு, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்று இந்தியாவுக்குத் திரும்பிய அவர், டாடா நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போதுதான் பால் பொருட்கள் தயாரிப்பு குறித்துப் படித்தார். குஜராத்தில் அரசுப் பாலேடு ஆய்வு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கொஞ்ச நாளில் அந்த வேலை போரடித்தது. வேறு ஏதாவது செய்யலாம் என முடிவு செய்தார். அந்தச் சூழலில் திருபுவன்தாஸ்பாய் படேல் என்ற நண்பருடன் உள்ளூர் பால் கூட்டுறவுச் சங்கத்தைக் காணச் சென்றார். அங்கே பால் வியாபாரிகளின் நிலையைப் பார்த்ததும் அவர் எடுத்த முடிவுதான், நாட்டின் வரலாற்றைத் திருப்பிப்போட்டது. அங்கேயே இருந்து பால் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க. . .
COMMENT(S):