சுட்டி ஸ்டார்ஸ் ! ஓலைச் சுவடி ! புகழ்பெற்ற பல நூல்களை நம் முன்னோர்கள் பனை ஓலையில் எழுதினார்கள். இந்த ஓலைச் சுவடிகளை எப்படித் தயார் செய்தார்கள் தெரியுமா? பனை மரத்தின் ஓலைகளைத் தனித்தனியாக எடுத்து, அதைப் பால் அல்லது தண்ணீரில் வேகவைத்து, நிழலில் காயவைத்து, ஒரே மாதிரியாக நறுக்குவார்கள். பதமாக ஆன பிறகு எழுத்தாணியைக் கொண்டு அதில் எழுதுவார்கள். பிறகு பட்டுநூல், மஞ்சள் தடவிய கயிறுகொண்டு கட்டிவைப்பார்கள். அப்படி எழுதிய ஓலைகளைத் தேவைப்படும்போது எடுத்து விளக்குக்கரி, கோவைச் செடியின் இலைச்சாறு, ஊமத்தைச் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றைப் பூசுவார்கள். அப்போது எழுத்துகள் நன்கு தெரியும். நீண்ட நாள் பயன்படுத்தி ஓலை உடைந்துபோனாலோ, நைந்து படிக்க முடியாத அளவுக்குப் போனாலோ மாற்று ஓலை எழுதுவார்கள். முறையாகப் பராமரிக்கப்பட்டால் இந்த ஓலைகள் அதிகபட்சம் 200 ஆண்டுகள் வரை நல்ல நிலையில் இருக்கும். தோப்புக்கரணம் ! இன்னும் சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது.. . .
COMMENT(S):