நியூ ஸ்போர்ட்ஸ் !உலகின் நம்பர்1 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்ட தீபிகா, 'உலகின் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். மகளிர் வில்வித்தைத் தர வரிசையில் 253 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கும் இவர் உலகத் தர நிலையில் இந்த இடத்தை அடைந்து இருப்பது இதுவே முதல் முறை. இதன்மூலம் வில்வித்தையில் உச்சத்தைத் தொட்ட இந்தியாவின் இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்பை தீபிகா பெற்றுள்ளார். உலகின் நம்பர் 1 வீராங்கனையாகப் பெருமை பெற்ற முதல் இந்தியப் பெண் டோலா பானர்ஜி! ''உலகத் தர வரிசையில் முதல் இடம் வகித்து இருப்பது மகிழ்ச்சியே. எனினும், என் கவனம் முழுவதும் ஒலிம்பிக்குக்குத் தயாராவதில்தான் உள்ளது'' என்கிறார் தீபிகா பெருமிதத்துடன். சவுதி அரேபியா பச்சைக்கொடி! ஒலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டுப் பெண்கள் பங்கேற்பதற்கு சவுதி அரேபிய அரசு முதல் முறையாக அனுமதி வழங்கி. . .
COMMENT(S):