மாயப் பாட்டியின் முத்துமாலை நெடுங்காலத்துக்கு முன் எகிப்தில் ஷகானா என்னும் இளவரசி இருந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழிகளுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள நீரூற்றில் குளிக்கச் சென்றாள். குளித்து முடித்துவிட்டு ஷகானா கரையேறினாள். அப்போது ஒரு பாட்டி நீரூற்றின் கரையில் நின்றுகொண்டு இருந்தாள். 'ஏய் கிழவி, உனக்கு இங்கே என்ன வேலை? இது எங்களைப் போன்ற அழகான இளவரசிகள் குளிப்பதற்கான இடம். சீக்கிரம் இங்கே இருந்து போய்விடு'' என்று இளவரசி கோபத்துடன் சொன்னாள். அதைக் கேட்டு அந்தப் பாட்டி சிரித்தவாறு அருகே வந்தாள். 'அழகான இளவரசியே, இப்போது இருப்பதைவிட நீ இன்னும் அழகாக ஆக வேண்டுமா? அப்படி என்றால் இந்த மந்திர முத்துமாலையை அணிந்துகொள்'' என்று ஷகானாவிடம் ஒரு முத்துமாலையைக் கொடுத்தாள். 'இவ்வளவு அழகான முத்துமாலையை நான் இதுவரை பார்த்ததே இல்லை'' என்று சொன்ன ஷகானா, அதைக் கழுத்தில் அணிந்துகொண்டாள். அடுத்த நொடி ஷகானாவின் கையும் காலும் குறுகிச் சுருங்கின.. . .
COMMENT(S):