மீண்டும் ஜோடி சேரும் கார்த்தி-காஜல்!

ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இருக்கிறது. முதல் நாள் கார்த்தி, காஜல் அகர்வால் பங்குபெறும் PHOTOSHOOT முடித்துவிட்டு சில காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார்கள்.

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு கார்த்தி, காஜல் இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்திலும் ராஜேஷின் முந்தைய படங்கள் போலவே சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

சென்னையில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு, கும்பகோணம், பொள்ளாச்சி, கோபி செட்டிபாளையம், தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கார்த்தி நடித்துவந்த பிரியாணி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவுற்று இருக்கிறது. ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கார்த்தி.

கார்த்தி, காஜல், சந்தானம் ஆகியோருடன் நரேன், பிரபு, சரண்யா மற்றும் பலர் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்காக தமன் இரண்டு பாடல்களை முடித்து கொடுத்து விட்டார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

Advertisement