Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அந்த பாவத்தை நான் செய்யவில்லை..!’ - பிக் பாஸை கலாய்க்கும் இயக்குநர் அமீர்

ராம், பாண்டவர் பூமி, பருத்தி வீரன், ஆடுகளம், மன்மதன், கழுகு, போக்கிரி, சாமி உள்ளிட்ட படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் சினேகன். இவரது நண்பரும் இயக்குநருமான அமீரிடம் சினேகன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருப்பதைப் பற்றி கேட்டோம்.

இயக்குநர் அமீர்

“பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. இதுவரை அந்தப் பாவத்தை நான் செய்யவில்லை. அறிவுபூர்வமான நிகழ்ச்சியாக எனக்கு அது தெரியவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சிகள் பொழுது போக்குக்காகத்தான். சினிமா உட்பட.  என்னுடைய தனிபட்ட கருத்து இது. அறிவை மழுங்கடிக்கக்கூடிய, கலாசாரத்தைச் சீரழிக்கக்கூடிய எந்த நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை'' என்றவரிடம் சினேகன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் உங்களிடம் ஏதாவது பகிர்ந்து கொண்டாரா என்றால், ''இல்லை, சினேகன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவர் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் போனது எனக்குத் தெரியாது. அந்த வீட்டுக்குள் யார் யார் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் கேட்டுக்கொள்வதும் இல்லை.

வீட்டில்கூட 'பிக் பாஸ்'  நிகழ்ச்சியைப் பார்க்கக் கூடாது என்றுதான் முதலில் ஆர்டர் போட்டேன். பொழுதுபோக்கிற்காகக்கூட இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடாது என்று சொல்லிவிட்டேன். மற்ற நிகழ்ச்சியெல்லாம் அறிவை வளர்க்கிறதா என்றால் என்னிடம் பதில் இல்லை. 

சினேகன்

இப்போது அதே விஜய் டி.வியில் வரும் 'நீயா நானா' பார்க்கிறோம். நம்ம நினைத்து வைத்திருக்கும் கோணத்திலிருந்து மாறுபட்ட கோணத்தில் சிலர் சொல்லும் கருத்துகள் வரும், இரண்டு தரப்பட்ட வாதங்கள் கேட்போம். நாம் இதெல்லாம் சரின்னு வைத்திருப்போம். அதை நிகழ்ச்சி முடிந்த பிறகு, நாம் சரின்னு நினைத்தது தப்பு என்று நாம் நினைப்போம். அதைத் திருத்திக்கொள்வோம்.

தற்போது எந்த சமூக வலைதளங்களுக்குச் சென்றாலும் 'பிக் பாஸ்' பற்றி ஏதாவது மீம்ஸ் வருகிறது. அதைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது. அதனால்தான் யாராவது அதைப் பற்றி பேசினாலும் அதைத் தவிர்த்துவிடுவேன். நாம் ஒருவராக இந்த உலகத்தைத் திருத்த முடியாது'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close