Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்?

'மஞ்சப்பை' படம் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

விமல். லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடிப்பில் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் 'மஞ்சப்பை'.இதில் தாத்தாவுக்கும் - பேரனுக்கும் இடையே உள்ள உறவை அற்புதமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. தாத்தாவாக நடித்த ராஜ்கிரண் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், 'மஞ்சப்பை' படத்தை தாசரி நாராயணராவ் தெலுங்கில் ரீமேக் செய்கிறார். அவரே தாத்தாவாக நடிக்கிறார்.

இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன. ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் அமிதாப் நடித்தால் நன்றாக இருக்கும் என அமிதாப்பை அணுகி இருக்கிறார்கள்..அமிதாப் என்ன சொல்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்