Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபிகா படுகோனே வீடியோ - சீறிப்பாயும் ஹீரோயின்கள்

 ’மை சாய்ஸ்’ என்ற வீடியோ மூலம் சமீபகாலங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் தீபிகா படுகோனே. பலரும் அந்த வீடியோவிற்கு தங்களது எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு சுதந்திரம் என்ற ரீதியில், அவர்களின் ஆடைகள், திருமணம், பெண்ணுடன் உடலுறவா, இல்லை ஆணுடனா இதெல்லாம் எனது சுதந்திரம் என அமைந்திருக்கும் அந்த வீடியோ. 

பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி , என் சாய்ஸ் என்பதை விட சிறந்த சாய்ஸ் என்பதே நியாயம். சாதனை படைப்பது, நாட்டிற்கு பெருமை சேர்ப்பது போன்ற விஷயங்கள் தான் பெண்களின் சக்தியை காட்டும் என கருத்து தெரிவித்தார்.

சோனாக்‌ஷி சின்ஹா அந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்த போது  பெண்கள் எப்போதும் தாங்கள் நினைத்த உடையை அணிய முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்ளவும் முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்வதும், திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதும் பெண்களின் முன்னேற்றத்துக்கானது என்று சொல்வதையும் ஏற்க முடியாது என கூறினார். 

இப்போது அடுத்ததாக அந்த வீடியோவிற்கு தேசிய விருது பெற்ற கங்கணா ரணாவத் கருத்து கூறியுள்ளார் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றிய கருத்து ஆண்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. பிறகு அதிகாரமளிக்கும் அந்த நிலையை உருவாக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம். பெண்களின் அதிகாரம் என்பது ஆத்மரீதியானதாகவும், மனிதமானத்துடனும் இருக்க வேண்டும். பெண்கள் எப்படி கவர்ச்சியாக மாறுவது என்பதில் அதிகாரம் அடங்கி இருக்கவில்லை.என கருத்து கூறியுள்ளார் கங்கணா. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close