Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானிலேயே இரு...!' - இந்திய பெண் கீதாவுக்கு சல்மான்கான் எதிர்பாராத அறிவுரை!

 பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் கீதாவிடம், " நான் உன்னுடைய இடத்தில் இருந்தால், இந்தியாவிற்கு திரும்ப விரும்பமாட்டேன்" என்று இந்தி நடிகர் சல்மான்கான் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

14 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ரயில் நிலையத்தில், இந்தியாவில் இருந்து வந்த ரயிலின் ஒரு பெட்டியில்  அனாதையாக அழுதபடி நின்று கொண்டிருந்த 9 வயதுடைய மாற்றுத்திறனாளியான சிறுமி, தனது பெற்றோர் பற்றியோ, தனது சொந்த ஊர் பற்றியோ எதுவும் தெரிவிக்க முடியவில்லை. பின்னர் அந்த சிறுமி கராச்சியில் உள்ள மையத்தில் தங்க வைக்கப்பட்டார். சிறுமியின் பெயர் என்ன என்று தெரியாததால், அறக்கட்டளை நிர்வாகிகள் சிறுமிக்கு கீதா என்று பெயர் சூட்டினர். கீதாவுக்கு தற்போது 23 வயது ஆகிறது.

இந்தியாவில் உள்ள கீதாவின் பிறந்த ஊரையும், பெற்றோரையும் கண்டுபிடித்து அவரை, அவர்களிடம் ஒப்படைக்க அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

கீதாவிடம் இந்திய வரைபடத்தை காட்டி, உனது ஊர் எது? என்று கேட்டால் ஜார்க்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களை விரல் வைத்து காட்டுவதாகவும், மேற்கொண்டு எதையும் வெளிப்படுத்த தெரியாமல் சோகத்தில் கண்ணீர் விட்டு அழுவதாகவும் அறக்கட்டளையின் நிர்வாகி பைசல் தெரிவித்தார். இந்தியப் பெண் கீதாவை அழைத்துவர இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் கீதாவிடம், " நான் உன்னுடைய இடத்தில் இருந்தால், இந்தியாவிற்கு திரும்ப விரும்பமாட்டேன்" என்று இந்தி நடிகர் சல்மான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில செய்தி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மூலம் கீதாவிடம்,  இந்தி நடிகர் சல்மான்கான் பேசினார். இவ்வளவு நாட்களாக கீதாவை பார்த்துக் கொள்ளும் பில்குய்ஸ் பிபிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கீதா நாடு திரும்பினால், அவர் தனது பெற்றோர்களிடம் இருந்து பெறும் அதே அன்பை காட்டிய அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக சல்மான் கூறினார்.

சல்மான்கானிடம் பேசிய கீதா, "பாகிஸ்தானில் எனக்கு ஒன்றும் கிடையாது. இந்தியாவிற்கு திரும்பிவர விரும்புகிறேன். என்னுடைய தாயை நான் அதிக நாட்கள் பிரிந்துவிட்டேன்" என்று கூறினார்.

கீதாவிடம் பேசிய சல்மான் கான், "உன்னை பாகிஸ்தானில் நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். பிறகு ஏன் மகிழ்ச்சியற்று இருக்கிறாய்?' என்று கேட்டுள்ளார். 

பாகிஸ்தானில் இருக்கும் கீதா ரமலான் நோன்பு இருக்கிறார். அங்கு இந்து கடவுளையும் வழிபாடு செய்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கீதாவின் பெற்றோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

"உங்களுடைய அம்மாவை கண்டுபிடித்துவீட்டீர்களா?" என்று சல்மான் கான் கேள்வி எழுப்பியபோது, கீதா அழுதுவிட்டார். இருப்பினும் கீதா, "என்னுடைய பெற்றோர்களால் வேண்டுமானால் என்னை அடையாளம் காணமுடியாது. ஆனால், என்னால் அவர்களை அடையாளம் காணமுடியும்" என்று உறுதியாக கூறினார்.

"கீதாவின் திருமணத்திற்கான பணம், மற்றும் அவர் இந்தியாவில் அவருடைய பெற்றோர்களை கண்டுபிடித்து, அவர்களுடன் இணையும் வரையிலான அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ள சல்மான்கான், இதுவரையில் கீதாவை மகள் போல் பார்த்துக் கொண்டவர்களுக்கு நன்றி  தெரிவித்துள்ளார்.

“கீதா அவருடைய பெற்றோர்களை கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் இவ்வளவு நாட்களாக அவரை நல்லபடியாக பார்த்துக் கொண்ட உங்களுடைய பணியானது மிகவும் சிறந்தது" என்று பிபிக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார் சல்மான். 

"நான் கீதாவின் இடத்தில் இருந்தால் திரும்பிவர மாட்டேன்" என்று சல்மான்கான் கூறியுள்ள நிலையில், 
கீதாவோ, "என்னுடைய பெற்றோரை கண்டுபிடித்தாலோ அல்லது கண்டுபிடிக்கவில்லை என்றாலோ என்னுடைய தயாகத்திற்கு வந்தே ஆகவேண்டும்"  என்று உறுதியாக கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close