Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கத்தி' ரீமேக்...ஹீரோவாக நடிக்கப்போவது யார்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்து நூறு கோடி க்ளப்பில் இணைந்த படம் கத்தி. படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் வெற்றியால் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் திட்டங்கள் உருவாகின.

இந்நிலையில் தெலுங்கில் யார் ஹீரோ என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெரியாத நிலையில் இந்தியில் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் அக்‌ஷய் குமார் ஆதீத ஆர்வம் காட்டுவது நாமறிந்ததே. ரமணா படத்தை கப்பர் இஸ் பேக் என்ற பெயரில் ரீமேக் செய்து மெகா ஹிட்டானது.

அதே போல் விஜய் நடிப்பில் தமிழில் ஹிட்டான துப்பாக்கி படத்திலும் அக்‌ஷய் குமார் நடித்து ஹாலிடே: எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி என்ற பெயரில் வெளியாகி ஹிட்டானது. முன்னதாக இப்படம் குறித்து சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது கத்தி ரீமேக்கில் அக்‌ஷய் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. அக்‌ஷய் குமார் இரண்டாவது முறையாக விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கப்போகிறார்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்